ராமதாஸ், அன்புமணி இடையே விரிசல்! தைலாபுரம் தோட்டத்தில் திலகபாமா அரசியல்! பாமக நிர்வாகி கண்டனம்
சென்னை: ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விவகாரத்தில் திலகபாமா அரசியல் செய்யக் கூடாது என பாமகவின் கொள்கை பரப்பு செயலாளர் பாரி மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே இளைஞரணித் தலைவர் நியமனத்தின் போது மேடையிலேயே அப்பட்டமாக சண்டை வந்தது. தனது மகள் வழி பேரன் முகுந்தனுக்கு அந்த பதவி கொடுப்பதாக ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் இருக்க, புதியவருக்கு இத்தனை பெரிய பொறுப்பை கொடுக்கலாமா என கேட்டார். அதற்கு ராமதாஸ், இது என் கட்சி, விருப்பமில்லாதவர்கள் வெளியேறலாம் என தெரிவித்தார்.
பனையூர் அலுவலகம்
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மேலும் பனையூரில் உள்ள அலுவலகத்தில் தன்னை சந்திக்க வரலாம் என அன்புமணி கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றார். இதன் பிறகு புத்தாண்டு விழா, பொங்கல் விழாக்களில் தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை நிலவியதாக சொல்லப்பட்டது.
அன்புமணி செயல்தலைவர்
இந்த நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், இனி தலைவராக நானே தொடர்வேன். அன்புமணி செயல் தலைவராக தொடர்பாக என தெரிவித்திருந்தார். அன்புமணி ஏன் நீக்கம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளதாகவும் அவற்றை சிறுக சிறுக தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
திலகபாமா
இந்த நிலையில் பொருளாளர் திலகபாமா, பாமகவில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அய்யாவின் அன்பினை ருசித்தவர் நான். ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம் என கருத்து தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து ராமதாஸை சமாதானப்படுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றிருந்தார். ஆனால் அவரை சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஒரு மணி நேரம் காத்திருந்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
திலகபாமா செயல்
இந்த நிலையில் திலகபாமாவின் செயலை கண்டித்து கொள்கை பரப்பு செயலாளர் பாரி மோகன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மரு.அய்யாவிற்கு அடுத்து சின்ன அய்யா அவர்கள் தான் பாமகவின் தலைமை, பாமகவை வழிநடத்தப் போகிறவர். இதில் எள் அளவிற்கு கூட கடைநிலை தொண்டர்கள் வரை சந்தேகமில்லை .
பிரதான கட்சி
இந்த கட்சி நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல. எவ்வளவு தியாகங்கள் , எவ்வளவு போராட்டங்கள் , எவ்வளவு அடக்கு முறைகளை கடந்து இன்று தமிழகத்தில் பிரதான கட்சி என்ற நிலைக்கு வந்திருக்கிறது என்பதை முதலில் பொருளாளர் உணர வேண்டும்.
வன்னியர் சங்க காலம்
வன்னியர் சங்க காலம் தொடங்கி உழைத்தவர்கள் பலர் அமைதி காக்கும் போது , ஊடகங்கள் மூலம் இது போன்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். கட்சிக்காக உழைக்கும் உண்மை தொண்டர்களுக்கு இது மிகுந்த மன வேதனை அளிக்கும்.
புதியவர்
திலகபாமா இதில் அரசியல் செய்யக்கூடாது. கட்சிக்காக உழைத்த மூத்தவர்கள் ஏராளமனோர் உள்ளனர் , திலகபாமா புதியவர் பொறுமை காக்க வேண்டும் . இவ்வாறு அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications