டெல்லி கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார்.. பாமக பாலு அறிவிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கிறார்
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார் என அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களவைக்காக 543 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில், பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என சொல்லப்படுகிறது.

விருந்து
இந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு டெல்லியில் இன்று இரவு அசோகா ஸ்டார் ஹோட்டலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விருந்தளிக்கிறார்.

அழைப்பு
விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதை தவிர கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழிசை தகவல்
தமிழகத்தில் இருந்து ஓபிஎஸ், ஈபிஎஸ், டாக்டர் ராமதாஸ் அல்லது டாக்டர் அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், எல்கே.சுதீஷ், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், பெஸ்ட் ராமசாமி, சரத்குமார், ஜான் பாண்டியன், கார்த்திக், என்ஆர் தனபாலன், பூவை ஜெகன்மூர்த்தி, தேவநாதன் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.
|
பாமக பாலு
அந்த வகையில், பாமக தரப்பில் அன்புமணி ராமதாஸ் விருந்தில் கலந்துகொள்ள உள்ளார். இதனை அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார்" என பாலு பதிவிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications