Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெய் பீம்: பாரதிராஜாவிற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்! "அப்படியே அந்த நடிகைக்கும்.." வன்னிஅரசு கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யாவை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ள நிலையில் அதை கிண்டல் செய்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் அன்புமணி ராமதாஸ்.

இதுதொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு கடிதம் மூலமாக 9 கேள்விகளை எழுப்பியிருந்தார் அன்புமணி ராமதாஸ்.

சூர்யா அறிக்கை

சூர்யா அறிக்கை

இதற்கு நடிகர் சூர்யா அறிக்கை மூலம் பதிலளித்தார். அதில் வருத்தம் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. பெயர் அரசியல் வேண்டாம் என்று சூர்யா அறிவுரை வழங்கியிருந்தார். இந்த நிலையில்தான் இயக்குனர் பாரதிராஜா சூர்யாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அரசியல்வாதிகள் திரைத்துறையை விட்டு விடுங்கள் என்ற பொருளில் பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

இதற்கு பதிலடியாக அன்புமணி ராமதாஸ் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில், ஒடுக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. இன்று தமிழ்நாட்டில் அதிகமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி அவர்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்ததில் மருத்துவர் அய்யாவுக்கு நிகராக இங்கு வேறு யாரும் இல்லை. ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை ((Jai Bhim Controversy) சாதி பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனையும் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பெருங்குடி சமுதாயமான வன்னியர் சமூகம் திட்டமிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது தொடர்பான சமூகப் பிரச்சனை. இந்த பிரச்சனையில் உங்களுக்கும் திரைத்துறையினருக்கும் மிகப் பெரிய புரிதல் இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

வன்னியர் அடையாளம்

வன்னியர் அடையாளம்

ஜெய்பீம் திரைப்படத்தில் சாதி வெறி பிடித்த கொடுமைக்கார சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட தேவர் திருமகனாரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை அவர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்து இருப்பீர்களா?

படைப்பு சுதந்திரம் எங்கே போனது

படைப்பு சுதந்திரம் எங்கே போனது

ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன், மேற்கண்டவற்றில் எந்தக் காட்சி அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தாலும் அதை கண்டித்தும் முதல் குரல் என்னிடமிருந்து தான் வந்திருக்கும். வானளாவிய படைப்புச் சுதந்திரம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும்தானா? இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முனைந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்தப் படைப்பு சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்? கடுமையான கண்டனக் கடிதத்தை தாங்கள்தான் எழுதியிருந்தீர்கள், நினைவு இருக்கிறதா? சமீபத்தில் வெளியான Family Man- II தொடர் முழுவதும் தடை (Ban) செய்ய வேண்டுமென்று கடுமையான எச்சரிக்கை விடுத்தீர்கள். அப்பொழுது எங்கே போயிற்று உங்கள் படைப்பு சுதந்திரம்? அண்மையில் வெளியான கர்ணன் படத்தில் 1997-ஆம் ஆண்டு என்று இருந்ததை மாற்றி '1990-களின் இறுதியில்" என்று போட வைத்தபோது, என்னவாயிற்று உங்கள் படைப்பு சுதந்திரம். படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவு படுத்தும் வகையில் வன்னியர்களுக்கு புனிதமான அக்னி குண்டத்தை வைத்து சத்ரியர் என்ற அடிக்குறிப்பு போட்டு கொலையாளிகளாகக் காண்பித்தால் அதற்கு நீங்களும், திரைத்துறையினரும் ஆதரவு அளிக்கிறீர்களா? இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

வன்னி அரசு

வன்னி அரசு

இந்த நிலையில் வன்னி அரசு இன்று ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் சூர்யாவுக்கு 4பக்கம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு 5பக்கம் என கடிதங்களை எழுதித்தள்ளிக்கொண்டு இருக்கிறார் சின்ன அய்யா அன்புமணி ராமதாஸ். அடுத்து நடிகை ஓவியாவுக்கும் எழுதினாலும் எழுதுவார் போல. பரவாயில்லை மாநிலங்களவை உறுப்பினரின் லெட்டர்பேடு இதற்காவது பயன்படுவது மகிழ்ச்சியே. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Recommended Video

    Anbumani சமூகத்தின் வலியை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது வலியும் நியாயமானது - Seeman
    அது ஏன் ஓவியா

    அது ஏன் ஓவியா

    வன்னிஅரசு ஓவியா பற்றி குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா எலிமினேட் ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஒன்றரை கோடி பேர் வாக்கு போட்டனர். இதுவரை தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே இது ஒரு சாதனையாக இருந்து வருகிறது. ஓவியா ஆர்மி என்று பெரும் ரசிகர் பட்டாளம் அப்போது செயல்பட்டது. இதையெல்லாம் பார்த்த அன்புமணி ராமதாஸ், ஓவியாவை காப்பாற்ற ஒன்றரை கோடி தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர் அவருக்கு ஓட்டு போட்ட ஒன்றரை கோடி மக்கள் எனக்கு வாக்களித்து இருந்தால் நான் மக்களை காப்பாற்றி இருப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால் ஓவியாவுக்கு கிடைத்த ஓட்டு கூட அன்புமணிக்கு கிடைக்கவில்லை என்று, எதிர்மறை பொருள் கொள்ளப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பிற கட்சியினரால் கிண்டல் செய்யப்பட்டது. இப்போது அந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் வன்னிஅரசு.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+