வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.. பிரமிக்க வைக்கும் பாமக வேட்பாளர் சாம்பால்.. பின்னணி பெருஸ்ஸா இருக்கே!
மத்திய சென்னையின் பாமக வேட்பாளர் சாம் பால் என்பவர் யார் தெரியுமா?
Recommended Video

சென்னை: பாமகவில் இப்படி ஒரு வேட்பாளரா? நமக்கு தெரிந்த பாமக வேட்பாளர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்று கடந்த காலம் ஒரு தோற்றத்தையும், பிம்பத்தையும் ஏற்படுத்தி தந்துள்ளது. ஆனால் பாமக தென்சென்னை பாமக வேட்பாளர் பற்றி கேட்க.. கேட்க.. ஆச்சரியமாக இருக்கிறது!
வெளிநாட்டில் பிரபலமான நிறுவனம் டோனி அண்ட் கய். ஹாலிவுட் நடிகர்களே விரும்பும் அளவுக்கு அவர்களின் ஹேர்ஸ்டைல்-ஐ மாற்றி காட்டுபவர்கள்!
இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டு பக்கம் வராதா என்று ஏங்கியவர்கள் எத்தனையோ பேர்!

நடிகர் நாசர்
அதன்படியே தற்போது தமிழகத்தில் அடியெடுடித்து வைத்தாலும், டோனி அண்ட் கய் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராக இருப்பவர்தான் சாம்பால். நீலாங்கரையில் இதன் கிளையை திறந்து வைத்ததுகூட நாசர் என கூறப்பட்டது.

தொழிலதிபர்
இப்படி முடிவெட்டும் தொழில் சார்ந்த பணியை இவர் கையில் எடுத்துள்ளதால் இதுதான் இவர் பணி என்று உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் இவர் சென்னையின் ஒரு பிரபல தொழிலதிபர். தொழில் அதிபர் என்பதுதான் இவரது முத்திரை என்று பார்த்தால், சினிமாவிலும் நடித்திருக்கிறாராம்.

லட்சுமி
பிரபுதேவாவின் லட்சுமி படத்தில் வில்லன் ரோல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. சரி.. சினிமாதான் இவரது மற்றொரு ஹாபி என்று பார்த்தால், இவர், பாமகவை சேர்ந்தவர் என்பதும் தெரியவருகிறது. பாமகவில் ஏதோ உறுப்பினராக இருக்கக்கூடும் என்று நினைத்தால், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி தலைவராம்!

போனஸ் செய்தி
இத்தனை அவதாரங்களுடன் மிளிரும் ஒருவருக்குதான் வேட்பாளர் அந்தஸ்து தேடி வந்துள்ளது. அது மட்டுமில்லை.. இவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர் என்பது கூடுதல் போனஸ் செய்தி! எப்படியோ பாமகவுக்கு ஒரு மல்ட்டிபிள் & ஸ்டைலிஷான வேட்பாளர் கிடைத்துவிட்டார்.. வெட்டு ஒன்னு.. துண்டு ரெண்டுன்னு பிரச்சாரத்தில் குதிங்க பாஸ்!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications