நாங்கதான் 2-வது பெரிய கட்சி.. 30 சீட் கொடுக்கனும்.. அதிமுகவிடம் பிடிவாதம் பிடிக்கும் பாமக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் தாங்களே 2-வது பெரிய கட்சி... குறைந்தது 30 சீட் கொடுக்க வேண்டும் என பாமக வலியுறுத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை இடம்பெறும் என தெரிகிறது. பாஜகவைப் பொறுத்தவரையில் 60 தொகுதிகளை குறிவைத்திருக்கிறது.

அதிமுக தொகுதி பங்கீடு

அதிமுக தொகுதி பங்கீடு

ஆனால் அதிமுக தரப்போ பாஜகவுக்கு 25, பாமகவுக்கு 20, தேமுதிகவுக்கு 15-18 என்ற பார்முலாவில் இருக்கிறதாம். கடந்த காலங்களைப் போல 160-170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது அதிமுகவின் திட்டம்.

பாஜக கணக்கு

பாஜக கணக்கு

இந்த பார்முலாவை கூட்டணி கட்சிகளுக்கும் பார்வார்டு செய்திருக்கிறது அதிமுக. பாஜகவோ குறைந்தது 30 தொகுதிகள் என்ற முனைப்பில் இருக்கிறதாம். அதுவும் கொங்கு மண்டலத்தில் கணிசமான இடங்களை நெருக்கடி கொடுத்தாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளதாம்.

30 சீட் கேட்கும் பாமக

30 சீட் கேட்கும் பாமக

பாமகவோ, பாஜகவை விட எங்களுக்கு குறைவான இடம் கொடுத்தால் எப்படி ஏற்க முடியும்? தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவை எங்களுடன் ஒப்பிடவே முடியாது. இயல்பாகவே நாங்கதான் 2-வது பெரிய கட்சி. இதுதான் உங்க பார்முலா எனில் எங்களுக்குத்தான் 30 சீட் கொடுக்க வேண்டு என்று உறுதியாக சொல்லிவிட்டதாம்.

மவுனம் காக்கும் தேமுதிக

மவுனம் காக்கும் தேமுதிக

தேமுதிக தரப்பில் இன்னமும் எந்த பதிலும் தராமல் இருக்கிறார்களாம். எந்த பக்கம் பேரம் படிகிறதோ அந்த பக்கம் போவது என்கிற அரத பழசு அழிவு பார்முலாவிலேயே விஜயகாந்த் குடும்பம் கெட்டியாக இருந்து கொண்டிருக்கிறது. இதுதான் அதிமுக கூட்டணியில் தற்போதைய நிலவரம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+