ஸ்டாலினிடம் நெருங்கிய டாக்டர் ஐயா.. தைலாபுரம் சும்மா அதிருதுல்ல! வெடிக்கிறது பாமக போராட்டம்.. திமுக?
சென்னை: இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்துக்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தில், கடந்த 2 வருடங்களாகவே, திமுக தரப்பை, பாமக மேலிடம் அதிகமாகவே நம்பி வந்தது.. "அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார், அதனால் போராட்டம் நடத்த வேண்டிய அவசியமிருக்காது" என்று பாமக அவசர செயற்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸும் ஒருமுறை கூறியிருந்தார்.

ராமதாஸ்: அதற்கேற்றவாறு கடந்த 2 வருடங்களாகவே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் சரி, அன்புமணியும் சரி, திமுகமீது எந்தவிதமான ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தாமலேயே இருந்ததை மற்ற அரசியல் கட்சிகளும் உற்றுகவனிக்கவே செய்தன.
ஆனால், நெய்வேலி போராட்டத்தில், திமுகவை நேரடியாகவே பாமக அட்டாக் செய்ய துவங்கியது.. இதற்கு பிறகு லோக்சபா தேர்தல் தீவிரமாகவும், திமுக மீதான விமர்சனங்களை பாமக கணிசமாக குறைத்துவிட்டது. ஒருவேளை திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க போகிறதோ? என்ற சந்தேகமும் வலம்வந்தது..
சந்திப்பு: இதற்கு பிறகு, தன்னுடைய பிறந்தநாளின்போது, பாமக தலைவர் அன்புமணி, நேரடியாகவே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் இந்த சந்திப்பு நீடித்திருந்தது.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, வன்னியர் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்காக முதல்வரை சந்தித்ததாக காரணம் கூறியிருந்தார்.
அன்புமணி, நேரிலேயே முதல்வரை சந்தித்து வலியுறுத்தியும்கூட, சாதிவாரி கணக்கெடுப்பினை திமுக முன்னெடுக்காதது பாமகவுக்கு வருத்தம்தான் என்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை பாமக அள்ளிவீசியிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு முதல், கஞ்சா விற்பனை, மேகதாது பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டு, அதில் திமுக அரசையும் நேரடியாகவே சாடியிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்..
தைலாபுரம்: தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது...
ஆனால், பீகார், ஆந்திரா, கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானாவிலும் இந்த நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. இனியும் மத்திய அரசு தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காலம் கடத்தாமல், தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
சமூகநீதி: சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசிவருகின்றன.. ஆனால், சமூகநிதியை விடாமல் பேசி வருவது பாமகதான்.. சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை திமுக அரசு திருத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும்... ஆனால் 2 வருடங்களாகியும் இடஒதுக்கீட்டை வழங்கவில்லை.
மேகதாதுவில் அணைகட்டுவோம் எனறு அந்த மாநில சொல்வது கண்டிக்கதக்கது.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும்... ஆனால் அவர் அமைதி காத்து வருகிறார்.
கஞ்சா போதை: தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசும், போலீசாரும் நினைத்தால் இந்த கஞ்சா நடமாட்டத்தை ஒரே வாரத்தில் கட்டுப்படுத்தலாம்.. ஆனால், போலீசாருக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. கஞ்சா விற்பவர்கள் கைதானாலும், மறுநாளே விடுதலை ஆகிவிடுகிறார்கள்.. ஆந்திராவிலிருந்துதான் கஞ்சா வருவதாக போலீசார் சொல்கிறார்களே, அப்படியானால், ஆந்திராவிற்கே சென்று ஏன் கஞ்சா தோட்டங்களை அழிக்கவில்லை?
தனிநபர் வருமானம்: திருவாரூர், திருவள்ளுவர், விழுப்புரம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தனிநபர் வருமானம் குறைந்து காணப்படுகிறது. தனிநபர் வருமானம் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் பல வருடங்களாக குறைந்து உள்ளது. அதனால் இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைத்து தனிநபர் வருமானத்தை பெருக்கலாம். ஆனால் இதனை அதிமுகவும், திமுகவும் செய்யவில்லை" என்று இரு கட்சிகளையுமே சாடினார் டாக்டர் ராமதாஸ்..!!
நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில்கூட, இந்த அளவுக்கு திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்காத நிலையில், பாமக போராட்டத்தை அறிவித்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு திமுக என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications