பாமகவின் மூன்று எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்! களை எடுக்கப்படும் அன்புமணி ஆதரவாளர்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களான சிவக்குமார், வெங்கடேசுவரன், சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக ராமதாஸ் ஆதரவாளரும், கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான அன்பழகன் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவரின் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.

PMK Tamil Nadu Ramadoss

சமீபகாலமாக பாட்டாளி மக்கள் கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்து வரும் செயல் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு.ஜி.கே.மணி அவர்களால் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைமை நிர்வாக்குழு அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில், அந்த குழு அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு இவர்களின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் அவர்களை பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக சொன்ன செயலும் ஒழுங்கீனமான செயல் என்பதை முதற்கட்ட விசாரணையில் தெரியப்படுத்தியதால் அவர்கள் மீது விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

முழுமையான ஒழுங்கு நடவடிக்கை குழு முன் விசாரணைக்கு அவர்கள் நால்வரும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால் கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரணை முடியும் வரை எந்த கட்சி சம்பந்தமான தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விசாரனைக்குழு அவர்கள் நால்வரையும் விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரமும் நிறுவனர் மற்றும் தலைவர் கொடுத்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே மகன் அன்புமணிக்கும், தந்தை ராமதாஸுக்கும் இடையே முட்டல் மோதல்கள் இருந்து வரும் நிலையில், தற்போது மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் நீக்கப்பட்டிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+