ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி.. சென்னை அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனை.. என்னாச்சு?
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ராமதாஸ் ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இவருக்கு வயது 85 ஆகிறது. வயது மூப்பு காரணமாக அவர் தனது உடல்நலனில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

மேலும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் இன்று ராமதாஸ் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியானது. இதனால் பாமகவினர் ஷாக்காகினர். இந்நிலையில் தான் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி விசாரிக்கப்பட்டது.
இந்த விசாரணையின்போது ராமதாஸ் 2 மாதத்துக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி வழக்கமான பரிசோதனைகளுக்காக ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்பட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
இது வழக்கமான பரிசோதனைகள் தான். அதிகபட்சம் 2 மாதம் அல்லது ஒரு மாதத்துக்கு ஒருமுறை அப்போலோவில் மருத்துவ பரிசோதனைகளை அவர் செய்வது வாடிக்கையானது தான். இதனால் பரிசோதனைகள் முடிந்ததும் ராமதாஸ் இன்றே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே இந்த மருத்துவமனையில் தான் அமைச்சர் அமைச்சர் ஐ.பெரியசாமியும், அதிமுக முன்னாள் அமைச்சரும், துணை பொதுச்செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் ராமதாசும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications