சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயர் சூட்டுக! மத்திய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்!
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயரை சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களின் வீரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்திய மாமன்னன் மாமல்லன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு முனையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரையும் தாங்கிய பெயர்ப்பலகைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைக்கப்பட்டிருக்கின்றன.

விமான நிலையங்கள் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. விமான நிலையங்களின் முனையங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள் பத்தாண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் அப்பெயர்களை சூட்ட வேண்டும் என பாமக வலியுறுத்தியது.
அதேபோல் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பாமகவின் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.
விமான நிலையங்களின் முனையங்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் போல ஒட்டுமொத்த விமான நிலையத்திற்கு தமிழர்களின் வீரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்திய பல்லவ மாமன்னன் மாமல்லனின் பெயரைச் சூட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications