PMK Protest: முகுந்தன் போனால் என்ன? பாமக ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கிய ராமதாஸின் அரசியல் வாரிசு?
சென்னை: பாமக ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கிய மருத்துவர் ராமதாஸின் வாரிசு. ஏற்கெனவே மகள் வழி பேரனுக்கு பாமக இளைஞரணித் தலைவர் பதவி கொடுத்ததால்தான் தந்தை- மகனுக்கு இடையே பிளவு ஏற்பட்டது.
பாமகவில் தந்தை ராமதாஸ்- மகன் அன்புமணியிடையே கடும் மோதல் போக்கு இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதாவது தனது மகள் ஸ்ரீகாந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமனுக்கு இளைஞரணித் தலைவர் பதவியை ராமதாஸ் கொடுத்ததால் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அன்று தொடங்கிய சண்டை இன்று வரை அப்படியே நீடித்து வருகிறது. இதனால் அந்த பதவியை முகுந்தன் ராஜினாமா செய்தார். பிறகு அந்த பதவி ஜி.கே.மணி மகன் தமிழ்க்குமரனுக்கு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மகள் ஸ்ரீகாந்திமதியை, ராமதாஸ் அரசியலுக்குள் கொண்டு வந்தார்.
அவருக்கு நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியை வழங்கினார். ஒரு கட்டத்தில் அன்புமணி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அன்புமணிக்காக வைத்திருந்த செயல் தலைவர் பதவியை மகள் காந்திமதிக்கு வழங்கினார்.
"என்னையும் கட்சியையும் மகள் காந்திமதி நன்றாக பார்த்துக் கொள்வார்" என ராமதாஸ் உருக்கமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மகள் காந்திமதியை வைத்து பொதுக் குழு கூட்டத்தையும் ராமதாஸ் நடத்தியிருந்தார்.
இந்த நிலையில் காந்திமதியின் மூத்த மகன் டாக்டர் சுகந்தனை கட்சியில் முன்னிலைப்படுத்தும் நோக்கத்தில் அவருக்கு கடந்த மாதம் மாநில செயற்குழு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனது அரசியல் வாரிசாக ராமதாஸ், சுகுந்தனை கொண்டு வந்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் டிசம்பர் 12 ஆம் தேதி தமிழக முழுவதும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்த போராட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக டாக்டர் சுகுந்தன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் பாமக ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரத்தில் சுகந்தன் கலந்து கொண்டிருந்தார். கழுத்தில் பாமகவின் கலச சின்னம் பொரித்த மஞ்சள் நிற துண்டை அணிந்திருந்தார்.












Click it and Unblock the Notifications