கஞ்சா மற்றும் மது போதையிலிருந்து இளைஞர் சமுதாயத்தை காக்கணும்! ராமதாஸ் சொல்லும் 6 யோசனைகள்!
சென்னை: கஞ்சா மற்றும் மது போதையிலிருந்து இளைஞர் சமுதாயத்தை காப்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் சொல்லும் 6 யோசனைகளை இங்கே பார்க்கலாம்.
1. தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

2. தமிழ்நாட்டில் ஏதேனும் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டால், அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 3 இலக்க இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிவிக்கப்பட வேண்டும். அதன் மூலம் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் கமுக்கமாக வைக்கப்படுவதுடன், சரியான தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்பட வேண்டும்.
3. தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் கஞ்சா பெரும்பாலும் பிற மாநிலங்களில் இருந்து தான் கடத்தி வரப்படுகிறது. பிற மாநிலங்களில் விளைவிக்கப்படும் கஞ்சாவை அம்மாநில அரசின் உதவியுடன் அழிக்கும் அதிகாரம் தமிழக காவல்துறைக்கு உண்டு. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி கஞ்சாவை அதன் ஆதாரத்திலேயே ஒழிக்க வேண்டும். எல்லைகளில் சோதனை நடத்தி கடத்தல் கஞ்சாவை பிடிக்கும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
4. கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருட்களையும் ஒழிப்பதற்காக துடிப்பான காவல் அதிகாரிகள் தலைமையில் படைகளை அமைத்து சிறப்பு இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும்.
5. போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து மாதம் ஒருமுறை காவல்துறையின் தலைமை இயக்குனர் தலைமையில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். கஞ்சா ஒழிப்பு குறித்த புதிய உத்திகளை வகுத்து, செயல்படுத்தி தமிழ்நாட்டை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்.
6. ஏற்கனவே பல முறை நான் வலியுறுத்தியவாறு, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி & கல்லூரிகளின் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications