தண்ணிக்குள்ள உள்ளாடையுடன்..அய்யாவை அசிங்கப்படுத்திட்டாங்க! கொந்தளிக்கும் பாட்டாளிகள்! யார் காரணம்?
சென்னை: பாமக உட்கட்சி மோதல் ஒருபுறம் சென்று கொண்டிருக்க சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார் கட்சியின் நிறுவனரான ராமதாஸ். முழு உடல் ஆரோக்கியத்துடன் அவர் இருக்கிறார் என்பதனை காட்டுவதற்காக அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தண்ணீருக்குள் நீச்சல் அடிக்க விட்டு, நடக்க முடியாதவரை நடக்க விட்டு அனுதாபம் தேடுவதாக நினைத்து அசிங்கப்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். பாமக கட்சியில் புதிதாக பதவி பெற்றவர் தான் இதற்கெல்லாம் காரணம் என புலம்புகின்றனர்.
தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் டாக்டர் ராமதாஸ். அவரை ஐயா என அவரது கட்சியினர் அழைப்பார்கள் வெறும் அரசியலோடு அவர் நின்றுவிடவில்லை. சமூகம், பொருளாதாரம், இட ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் என பல துறைகளில் அவரது அறிக்கைகள் ஆளும் கட்சிகளுக்கே வழிகாட்டியாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் யாரும் எதிர்பாரா வண்ணம் ஒரு அறிக்கை விட்டு ஆளும் தரப்பையே ஆட்டி பார்ப்பவர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பாமகவில் உட்கட்சி பூசல் நிலவுகிறது. இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக கட்சியின் தலைவரான அன்புமணிக்கும் அவரது தந்தையும் கட்சியின் நிறுவனருமான ராமதாசுக்கும் பிரச்சனை இருப்பதாக சொல்லப்படுகிறது.

உச்சகட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாட்டில் அன்புமணியை விமர்சித்து பேசினார் ராமதாஸ். இது வீட்டுக்குள் இருந்த பிரச்சனையை வெளியில் கொண்டு வந்து விட்டதாக கூறி அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர் பாமகவினர். ராமதாஸின் வயதையும் மன நலனையும் தவறாக பயன்படுத்தி சிலர் அவரை இப்படி பேச வைக்கிறார்கள் என பாமக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரு வீடியோ தைலாபுரம் தரப்பில் இருந்து பரப்பப்பட்டது.
உள்ளாடையுடன் ராமதாஸ் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பது போலவும் தண்ணீருக்குள் உடற்பயிற்சி செய்வது போலவும் அந்த வீடியோ இருந்தது. தண்ணீருக்குள்ளே மிகவும் தட்டு தடுமாறி ராமதாஸ் நீச்சல் அடித்ததோடு வெளியே வந்த பிறகு நடக்க முடியாமல் நடந்தார். ராமதாஸ் மிக்க உடல் நலத்துடன் இருக்கிறார் என்பதை காட்டிக் கொள்வதற்காக பாமகவில் பதவி பெற்ற ஒருவர் இதனை பரப்பி விட்டுள்ளார் என்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த வீடியோ ட்ரோல் மெட்டீரியல் ஆகி இருக்கிறது.
பழைய செந்தில் கவுண்டமணி பட காமெடிகளுடன் இணைத்து ராமதாசை விமர்சித்து வருகின்றனர். ஒரு காலத்தில் சிங்கம் மாதிரி இருந்த மனுசன இப்படி அசிங்கப்படுத்தி விட்டீர்களே என எதிர்க்கட்சியினரே கூறும் அளவுக்கு அந்த வீடியோ இருக்கிறது. எப்போதும் வெள்ளை உடையில் கம்பீரமாக வலம் வந்த ராமதாஸை, பதவி ஆசைக்காக அசிங்கப்படுத்தி விட்டார்கள் என பாமகவினரே கொந்தளித்து வருகின்றனர்.
மேலும் திமுக அதிமுக தரப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களும் இந்நாள் அமைச்சர்களும் தைலாபுரத்திற்கே போன் செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. பொதுவாக அரசியல்வாதிகள் உடற்பயிற்சி செய்வது போலவும், யோகா செய்வது போலவும் அடிக்கடி வீடியோ வெளியிடுவது வழக்கம்தான் என்றாலும், ராமதாஸ் அந்த வீடியோவில் மிகவும் மெலிந்து, தளர்ந்த நடையுடன் காணப்படுகிறார். நிச்சயம் ராமதாசை விரும்பாதவர்கள் கூட இதனை பார்த்து வருந்தி இருப்பார்கள் எதற்காக இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என தைலாபுரம் தரப்புக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications