அட என்ன ஒரு அதிசயம்.. விஜயகாந்தை வீட்டிற்கே சென்று சந்தித்த ராமதாஸ்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சந்திக்க இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்த ராமதாஸ்- வீடியோ

    சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு நடத்தி உள்ளார். சென்னையில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

    அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் இடம்பிடித்து உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் பெரிய அளவில் நட்பான கட்சிகள் கிடையாது. இதற்கு முன் தேர்தல் கூட்டணியில் இடம்பெற்ற நேரத்தில் கூட இரண்டு கட்சிகளும் பெரிய அளவில் நட்பாக இல்லை.

    இப்போது அதிமுக கூட்டணியில் பாமக அதிக இடங்களை பெற்று இருப்பது கூட தேமுதிகவுக்கு பெரிய வருத்தத்தை அளித்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

    மனக்கசப்பு

    மனக்கசப்பு

    வடக்கு மாவட்டங்களில் இரண்டு கட்சிகளும் வலுவான கட்சிகள். இதனால் அதிமுக கூட்டணியில் இரண்டு கட்சிகளில் யாருக்கு எந்த இடம் கொடுப்பது என்று பிரச்சனை நிலவி வருகிறது.இதனால் தேமுதிக - பாமக கட்சி தலைவர்களிடையே சிறிய மனக்கசப்பு இருந்து வருகிறது.

    இருவரும் சந்திப்பு

    இருவரும் சந்திப்பு

    இதற்கு மத்தியில்தான் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சந்தித்து இருக்கிறார். சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் ராமதாஸ் அவரை சந்தித்தார். தற்போது இவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    [ ஒட்டு மொத்த நாடும் ஒற்றை விரலுடன்.. லோக்சபா தேர்தல் 2019 ]

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் , ஜிகே. மணி, அதிமுக உறுப்பினர்கள், கோகுல இந்திரா, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணை பொதுச்செயலாளர் சுதீஷ் ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருக்கிறார்கள். இதனால் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    கூட்டணி பேச்சு

    கூட்டணி பேச்சு

    இவர்கள் இருவரும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு கட்சி தலைவர்களும் மனஸ்தாபத்தை மறந்து தேர்தலில் ஒன்றாக உழைக்க வழி செய்யும் வகையில் இந்த சந்திப்பு நடந்து உள்ளது என்று கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+