இனி நம்ம தான்.. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி - பொதுக்குழுவுக்கு அழைத்த அன்புமணி
சென்னை: அன்புமணி நடத்தும் பாமக பொதுக் குழு அறிவிப்புக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அன்புமணியின் பொதுக் குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பு அறத்திற்கும் , நீதிக்கும் கிடைத்த வெற்றி என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11,00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11,00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம். உங்கள் அனைவரையும் சந்திப்பதற்காகவும், ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காகவும் காத்திருக்கிறேன். வாருங்கள் சொந்தங்களே" என்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகஸ்ட் 19 ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டப்படும் என்று அறிவித்தார். ஆனால், அன்புமணி அதற்கு உடன்படவில்லை. இதைத்தொடர்ந்து, போட்டியாக ஆகஸ்ட் 9 ஆம் தேதியான நாளை பொதுக் குழு கூட்டம் கூட்டப்படும் என்றும் அறிவித்தார். இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று மாலை விசாரணைக்கு வந்தது. அன்புமணி ராமதாஸ் நேரடியாக நீதிபதி முன்பு ஆஜராகினார். காணொலி வாயிலாக ராமதாஸ் ஆஜராகியிருந்தார். இதனையடுத்து, விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் வழக்கின் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்காததால் நாங்கள் பொதுக்குழு நடத்த ஆட்சேபனை இல்லை என்றும், நாளை திட்டமிட்டபடி பொதுக் குழுவை நடத்தவோம் என்று அன்புமணி தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகின.
பின்னர், அன்புமணி தரப்புக்கு மீண்டும் நீதிபதி அழைப்பு விடுத்தார். அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்த நிலையில், பொதுக் குழுவுக்கு தடைகோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அன்புமணியின் பொதுக் குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ராமதாஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications