புஸ்ஸூனு போகுமா பாமக கணிப்பு? திமுக ரெடியாகுதே.. 11ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.. ஏன் தெரியுமா?
சென்னை: கர்நாடகாவில் ஒரேயொரு தொகுதியில் 40,000 போலி வாக்காளர் முகவரிகள் உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். அத்துடன் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறி, அவற்றையும் ராகுல் வெளியிட்டுள்ளார்.. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறது.
தமிழக அரசியல் பரபரத்து காணப்படுகிறது.. கூட்டணி பேச்சுவார்த்தைளையும் தாண்டி, தங்களது தனித்தன்மையை நிரூபிக்கவும், கட்சியை வலுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளையும் அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

திமுக - விஜய்
அந்தவகையில், திமுகவும் தயாராகி வருகிறது. விஜய் தலைமையில் தவெகவின் வருகை ஒருபுறம் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தாலும் இருபெரும் திராவிட கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி என்கிறார்கள்..
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதையொட்டி கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதி பேரணி செல்வோம் என்று திமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக - அதிமுக இணைந்து போட்டியிட உள்ள சூழலில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை துவக்கி நடத்தி வருகிறார்.. செல்லுமிடமெல்லாம் திமுக அரசை கடுமையாக சாடி வருகிறார்.
பாமக உடைகிறதா
பாமக என்ன முடிவெடுக்கும் என்று தெரியவில்லை.. இன்று மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தை, அன்புமணி நடத்தியிருக்கிறார்.. பாமக தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், பாமகவில் தொடர்ரந்து பரபரப்பு நிலவுகிறது.. பாமக உடைகிறதா? தொண்டர்கள் என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.
11ம் தேதி ஆர்ப்பாட்டம்
இப்படிப்பட்ட சூழலில் காங்கிரசும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக கூட்டணியுடன் உறுதியாக இருந்தபோதிலும், தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்திருப்பது, பலரது கவனத்தை பெற்றுள்ளது.
பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆக.11-ம் தேதி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்தாக அக்கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை மூலம் வெளியிட்டிருக்கிறார்.
போலி வாக்காளர்கள்
அந்த அறிக்கையில், "தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக தொடர்ந்து முறை கேடுகளை நிகழ்த்தி வெற்றி பெற்று வருவதை ராகுல்காந்தி ஆதாரங்களுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்ப்பை ஆதாரத்துடன் வெளியிட்டார். அதேபோல, மகாராஷ்டிராவில் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் 1 கோடி போலி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருப்பதாக புள்ளி விவரத்தையும் வெளியிட்டார்.
இண்டியா கூட்டணி
தேர்தல்களில் தொடர்ந்து பாஜக வெற்றி பெறுவதில் மிகப்பெரிய மோசடியை செய்வதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தலைவர் ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை ஜனநாயகத்தை காக்கும் போராட்டத்தில் இண்டியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுக்கும்.
தேர்தல் ஆணைய முறைகேடுகளையும், பாஜகவுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் ஆக.11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று செல்வப்பெருந்தகை தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications