“எப்பா Sorry Bro.. Next Question Bro".. விஜய் பற்றி கேட்டதுமே பட்டென கவுன்ட்டர் கொடுத்த அன்புமணி!
சென்னை: "எப்பா Sorry Bro.. Next Question Bro" எனச் சிரித்தபடியே கூறி தவெக தலைவர் விஜய் பற்றிய கேள்வியை தவிர்த்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
2025 - 2026 ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 18-வது, வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை - தி.நகர் ஜி.ஆர்.டி கிராண்ட் ஹோட்டலில் இன்று வெளியிட்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்காத விவகாரம் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து "What Bro? It's Very Wrong Bro" என தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கேட்டதற்கு விஜய் ஸ்டைலிலேயே "Sorry Bro.... Next Question Bro" என கிண்டலாக பதில் அளித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
தவெக விஜய் பேச்சு
சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தும், தவெகவின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் பேசினார். அப்போது மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
அப்போது மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் பேசினார் விஜய். புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாடு அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது பற்றி பேசினார் விஜய்.
மும்மொழிக் கொள்கை
விஜய் பேசுகையில், "நமது ஊர் சுயமரியாதை ஊர். எல்லா மொழிகளையும் நாம் மதிப்போம், அதில் மாற்றுக் கருத்தே இல்லை, இங்கே தனிப்பட்ட முறையில் எந்த மொழியை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் தேவைப்பட்டால் கற்றுக்கொள்ளலாம். வேறொரு மொழியை அரசியல் ரீதியாக திணிப்பதை அனுமதிக்க முடியாது. 3வது மொழியை திணிக்கும் மும்மொழி கொள்கையை உறுதியாக எதிர்க்கிறோம்.
ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக, ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை கல்விக்கொள்கையை கேள்விக்குறியாக்கி, வேறொரு மொழியை வலுக்கட்டாயமாக அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால்... எப்படி ப்ரோ? தவெக சார்பில் அதை நாமும் அதை எதிர்ப்போம்" என்றார்.
வாட் ப்ரோ.. வெரி ராங் ப்ரோ
மேலும், "கல்வி நிதி விவகாரத்தில் எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டையிடுகிறார்கள். கொடுக்க வேண்டியது அவர்களது கடமை, வாங்க வேண்டியது இவர்களது உரிமை. இங்கே எவ்வளவு சீரியஸாக ஒரு பிரச்சனை நடந்துகொண்டிருக்கிறது.? இவங்க ரெண்டு பேரும், அதாங்க ஃபாசிஸமும் பாயாசமும்.. நம்ம கொள்கை எதிரியும் அரசியல் எதிரியும் பேசி செட்டிங் செய்துகொண்டு சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் அடித்துக் கொள்வதுபோல அடித்துக் கொள்வார்களாம்... மக்கள் அதை நம்பணுமாம். "What Bro? It's Very Wrong Bro" இதுக்கு இடையில நம்ம பசங்க உள்ளபோய் #TVKforTN என சம்பவம் செய்துவிட்டு வந்துவிட்டார்கள். 'யார் சார் நீங்கள்லாம்? எங்க சார் இருக்கீங்க?' ஸ்லீப்பர்செல்ஸ் மாதிரி" என்று பேசியிருந்தார் தவெக தலைவர் விஜய்.
அன்புமணி ரிப்ளை
இந்நிலையில் தான் "What Bro? It's Very Wrong Bro" என தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு விஜய் பாணியிலேயே "Sorry Bro.... Next Question Bro" என கிண்டலாக பதில் அளித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
வரலாறு தெரியாம தப்பு தப்பா பேசாதீங்க.. மருத்துவ படிப்பு விவகாரம்.. உதயநிதிக்கு அருண்ராஜ் பதில்












Click it and Unblock the Notifications