"நல்லதே நடக்கும்!" வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு.. அன்புமணி ராமதாஸ் கூறிய முக்கிய கருத்து
சென்னை: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் இட ஒதுக்கீடு மற்றும் மும்மொழி கொள்கை தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பாட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், ஶ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் தொகுதிகளுக்கு "பாமக 2.0" எனப் பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொறுப்புகள் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாமக காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக மாநில இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

கடும் நடவடிக்கை
இந்தக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "பாமக பொறுப்பாளர்கள் நேர்மையாக இருக்க வேண்டும், பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருப்பவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள், யார் மீதாவது புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர் கட்சி பொறுப்பில் மற்றும் அடிப்படை உறுப்பினர்கள் இருந்து நீக்கப்படுவார்கள். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாகக் கிடைக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றுவார்.

பூரண மது விலக்கு
இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சியினர் பற்றித் தெரியும்? பாமக கட்சியினரிடம் சொல்லியிருக்கிறேன் நிச்சயமாகச் சட்டம் நிறைவேறும். மதுவை அண்ணா ஏற்று கொள்ளவில்லை. அண்ணா பெயர் வைத்து கட்சி நடத்தும் கட்சிகள் மதுவை விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது நமது நோக்கம். அண்ணா பிறந்த மண் காஞ்சிபுரம்" என்று அவர் தெரிவித்தார்.

வன்னியர் இட ஒதுக்கீடு
இந்த நிகழ்ச்சி நடந்த முடிந்த பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் மூலம் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டார். இது தொடர்பாகத் தமிழக அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்று தாங்கள் நம்புவதாகத் தெரிவித்த அவர், விரைவில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

மும்மொழி கொள்கை சாத்தியமில்லை
தமிழ்நாட்டில் மத்திய அரசின் இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்ட அன்புமணி ராமதாஸ், பாஜக ஆளும் உத்திர பிரதேசத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாகத் தமிழைக் கொண்டு வர முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், நாட்டில் இரு மொழி கொள்ளை மட்டுமே சாத்தியமாகும் என்றும் மூன்றாவது மொழி சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications