தமிழக உரிமையை பறிக்காதீர்கள்! நீங்கள் செய்வது நியாயமில்லை! மத்திய அரசு மீது அன்புமணி பாய்ச்சல்!
சென்னை: தமிழக அரசு மருத்துவர்களுக்கு உயர்சிறப்பு படிப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க, மத்திய சுகாதார அமைச்சகம் முட்டுக்கட்டை போடுவது நியாயம் இல்லை என அன்புமணி ராமதாஸ் சாடியிருக்கிறார்.
இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதய நோய், நரம்பியல் நோய், சிறுநீரகவியல், குழந்தைகள் நலம், உள்ளிட்ட துறைகளில் மருத்துவ வல்லுனர்களே இல்லாத நிலை உருவாகி விடும் என அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மத்திய அரசு
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 20 வகையான உயர்சிறப்புப் படிப்புகளில் 369 இடங்கள் உள்ளன. 2017-ம் ஆண்டு வரை இந்த இடங்களை தமிழக அரசுதான் நிரப்பி வந்தது. ஆனால், 2017-ம் ஆண்டு முதல் இந்த இடங்கள் அனைத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டு நிரப்பி வருகிறது. அந்த இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டையும் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.

50% இட ஒதுக்கீடு
அதனால், உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் பெரும்பான்மையான இடங்களை பிற மாநில மருத்துவர்கள் கைப்பற்றிக் கொள்கின்றனர்; தமிழக மருத்துவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்தச் சூழலில் மருத்துவர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஜனவரி 12-ஆம் தேதி அளித்தத் தீர்ப்பில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என ஆணையிட்டது.

மத்திய அமைச்சகம்
ஆனால், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்போவதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

நீதிமன்ற தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த மேல்முறையீடு இன்னும் விசாரணைக்கு ஏற்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு உயர்சிறப்பு மருத்துவக் கல்வி இடங்களில் 50% இட ஒதுக்கீடு வழங்குவதை உச்சநீதிமன்றமும் எதிர்க்கவில்லை. உயர்சிறப்பு படிப்புகளிலும் தனி இட ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் முட்டுக்கட்டை போடுவது நியாயமும் அல்ல; சமூக நீதியும் அல்ல.

நியாயம் அல்ல
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள இடங்களுக்கு மத்திய அரசே கலந்தாய்வு நடத்துவதால், 85% இடங்கள் பிற மாநில மருத்துவர்களுக்கே கிடைக்கின்றன. இதே நிலை இன்னும் ஐந்தாண்டுகளுக்கு தொடர்ந்தால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதய நோய், குழந்தைகளுக்கான இதய நோய், நரம்பியல் நோய், சிறுநீரகவியல், குழந்தைகள் நலம், உள்ளிட்ட துறைகளில் மருத்துவ வல்லுனர்களே இல்லாத நிலை உருவாகி விடும். சமூகநீதிக்கு எதிரான இந்த நிலை ஏற்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது.

உறுதி செய்க
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தமிழக அரசின் உரிமை. அதை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அங்கீகரித்திருக்கின்றன. அதற்குப் பிறகும் அந்த உரிமையை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் பறித்துக் கொள்வதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. உடனடியாக தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழக அரசு மருத்துவர்களுக்கு உயர்சிறப்பு படிப்புகளில் 50% இடங்கள் ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications