மத்திய அமைச்சர் சவுமியா அன்புமணி! பாமக போட்ட மெகா பிளான்! எதிர்பார்க்காத அஸ்திரமும் ரெடி! அப்போ திமுக
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இடையே பெரிய போராட்டம் ஒன்றை நடத்த பாமக கட்சி திட்டமிட்டுள்ளதாம். தர்மபுரியில் தனது மருமகள் சௌமியா வெற்றிபெற்று, அதே சமயம் மத்தியில் மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் சௌமியா மத்திய கேபினெட்டில் இடம்பிடிப்பார் என்று பாமக கணக்கு போட்டு இந்த போராட்டத்தை திட்டமிட்டுள்ளதாம்.
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

5ம் கட்ட தேர்தல்: 2024 மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், நாடு இப்போது ஐந்தாவது கட்ட பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது.
பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில் 3, லடாக்கில் 1, மகாராஷ்டிராவில் 13, ஒடிசாவில் 5, உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த கட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி, லக்னோ மற்றும் கைசர்கஞ்ச்; பீகாரில் சரண்; மற்றும் அனைத்து ஆறு மும்பை மக்களவைத் தொகுதிகள் மற்றும் மகாராஷ்டிராவில் கல்யாண் ஆகிய தொகுதிகள் ஆகும்.
லோக்சபா தேர்தல் பாமக: இந்த லோக்சபா தேர்தலுக்கு இடையே பெரிய போராட்டம் ஒன்றை நடத்த பாமக கட்சி திட்டமிட்டுள்ளதாம். வன்னியர் சமூகத்திற்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல் படுத்தாமல் இருக்கும் திமுக அரசை கண்டித்தும், அமல்படுத்த வலியுறுத்தியும் பாமக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கடந்த வாரம் அறிவித்திருந்தார் டாக்டர் ராமதாஸ்.
ஆனால், போராட்டத்தின் தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் போராட்டத்தை நடத்த ராமதாஸ் ஆலோசித்திருக்கிறார் என்கிறார்கள். அதாவது, தர்மபுரியில் தனது மருமகள் சவுமியா வெற்றிபெற்று, அதே சமயம் மத்தியில் மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் சவுமியா மத்திய கேபினெட்டில் இடம்பிடிப்பார்.
இந்த முறை கேபினெட்டில் பாமக சேர்த்துக்கொள்ளப்படும் என பாஜக தலைமை உறுதிக் கொடுத்திருப்பதால் அதை நம்புகிறார் ராமதாஸ். அதேபோல, இந்த வருடம் இறுதியில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த திமுக தலைமை தீர்மானித்திருக்கிறது.
அதனால், அந்த தேர்தலில் வட தமிழகத்தில் பாமக வெற்றிபெறுவதற்கு இந்த இடஒதுக்கீடு போராட்டம் உதவியாக இருக்கும். அந்த வகையில் சௌமியா அமைச்சரானால் அந்த கொண்டாட்டம் ஜூன் மாதம் வரை பாமகவில் நீடிக்கும். அதேபோல, டிசம்பரில் ஊரக உள்ளாட்சி நடத்தப்பட்டால் அதற்கான தேர்தல் நடைமுறைகள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கும். ஆக, இந்த 2 கணக்குகளை ராமதாஸ் போட்டு வைத்திருப்பதால் போராட்டத்தை ஆகஸ்டில் நடத்தலாம் என ஆலோசித்திருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications