Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SAD ஃபாதரான GOD ஃபாதர்! தைலாபுரத்தில் தவம் கிடந்த திராவிட கட்சிகள்! இப்போ அப்படியே சீன் மாறிடுச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, பாமகவின் ராமதாஸ் தரப்புடன் திமுக தலைமை ரகசியமாக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை ராமதாஸ் வெளிப்படையாக மறுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான பாமகவின் உறவு தொடர்கிறது என்றும் அவர் அறிவித்திருப்பது, அவரது அரசியல் நிலைப்பாடு எந்த திசையில் செல்கிறது என்ற குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

"என் மகன் அன்புமணி பாமக இல்லை. பாமக என் கட்சி.. நான் வளர்த்த கட்சி.. என்னுடன் தான் கூட்டணி பற்றி பேச வேண்டுமென பேசி வந்தவர் ராமதாஸ். ஆனால் அந்தக் கருத்தை பொருட்படுத்தாமல், பாமக தலைவர் அன்புமணியுடன் நேரடியாக பேசி, பாமக அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு, ராமதாஸை அரசியல் ரீதியாக சங்கடமான நிலைக்கு தள்ளியது. அன்புமணி அதிமுக அணியில் இணைந்துவிட்டதால், இனி ராமதாஸ் திமுக அல்லது தவெக பக்கம் போவதைத் தவிர வேறு வழியில்லை என்ற பேச்சும் அரசியல் களத்தில் எழுந்தது.

Ramadoss PMK Anbumani Ramadoss

ராமதாஸ்

அதற்கு ஏற்பவே, முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி நடத்துகிறார் என ராமதாஸ் திடீரென பாராட்டுப் பேசியதும், திமுக தரப்பில் அவரை அணுக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற செய்தியும் கசிந்தது. ஆனால், அந்தச் செய்தியை முழுமையாக மறுக்கவும் முடியாமல், முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், தேர்தல் நேரத்தில் வரும் செய்திகள் சில உண்மையாகவும் சில உண்மை இல்லாமலும் இருக்கும் என்ற விளக்கத்தை மட்டும் ராமதாஸ் அளித்துள்ளார். இதன் மூலம், அவர் திமுகவுக்கு கதவை முழுமையாக மூடவும் இல்லை, திறந்துவிடவும் இல்லை என்பதே அரசியல் நோக்காளர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.

ராமதாஸ் முரண்பாடு

அன்புமணி தரப்பே பாமக என்பதை நம்பிய அதிமுக, அவரை முன்னிறுத்தி தங்கள் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. இந்த நிலை திமுகவுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான், ராமதாஸை திமுக இன்னும் வெளிப்படையாக அணுகாமல், தூரம் கடைப்பிடித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் விசிக. ராமதாஸுடன் திமுக பேசுவதாக தெரிந்தாலே, விசிக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும். ஒருவேளை ராமதாஸை திமுக கூட்டணியில் சேர்க்க விசிக சம்மதித்தால் கூட, அதிமுக கூட்டணியில் அன்புமணிக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படுகிறதோ, அதற்கு குறையாமல் எங்களுக்கும் தர வேண்டும் என்ற கோரிக்கையை ராமதாஸ் வைப்பார்.

திமுக

அப்படிப் பார்த்தால், குறைந்தது 18 தொகுதிகளுக்கு குறையாமல் ராமதாஸுக்கு திமுக வழங்க வேண்டிய நிலை உருவாகும். திமுக அதற்கு ஒப்புக்கொண்டால், தற்போது கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளும் தங்களுக்கான தொகுதி எண்ணிக்கையை உயர்த்திக் கேட்பார்கள். அதற்கு திமுக மறுத்தால், இரண்டு துண்டான கட்சியே இத்தனை தொகுதிகள் கேட்கும் போது, நாங்கள் கேட்பதில் என்ன தவறு? என்ற கேள்வி எழும். மறுபுறம், 5 அல்லது 6 தொகுதிகளுக்கு ராமதாஸை சம்மதிக்க வைத்தாலும், அது மற்றொரு சிக்கலை உருவாக்கும்.

2026 சட்டமன்ற தேர்தல்

6 தொகுதிகளில் போட்டியிடும் கட்சியா பெரிய கட்சி, 18 தொகுதிகளில் போட்டியிடும் நாங்களா பெரிய கட்சி?" என்று அன்புமணி தரப்பு ராமதாஸ் தரப்பை மறைமுகமாக சீண்டக்கூடிய சூழல் உருவாகும். இந்த அனைத்து கணக்குகளையும் பார்த்தால், தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளை உறுதி செய்ய ராமதாஸுக்கு தற்போது விசாலமான ஒரே வாய்ப்பு தவெக பக்கம் போவது மட்டுமே. இருந்தாலும், அதையும் அவர் கடைசி தேர்வாகவே வைத்திருக்கிறார்.

ராமதாஸுக்கு பயம்

பாமக என்னிடமே உள்ளது என்று நீண்ட காலமாக சொல்லி வந்த ராமதாஸுக்கு, தற்போது கட்சியை மகன் பக்கம் மட்டும் இழுத்துச் சென்று, தன்னை அரசியல் ரீதியாக புறக்கணித்து விடுவார்களோ என்ற பயம் உருவாகியுள்ளது. அதனால்தான், தன்னை கேட்காமல் அன்புமணியுடன் கூட்டணி பேசிய எடப்பாடி பழனிசாமியை கூட அவர் கடுமையாக விமர்சிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். "அன்புமணி இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று தெளிவாக சொல்லாமல், நாங்கள் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகவில்லை என்று தேவையில்லாமல் விளக்கம் அளித்திருப்பதன் மூலம், மகனுக்கு நிகராக தனக்கும் மரியாதை அளித்தால், என்டிஏ கூட்டணியில் தொடரத் தயாராக இருக்கிறேன் என்ற செய்தியை ராமதாஸ் மறைமுகமாக சொல்லியுள்ளார் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+