சொல்லுங்க.. இந்த ராமதாஸா? அந்த அன்புமணியா? பாமக எம்எல்ஏக்களுக்கு பறந்த நோட்டீஸ்! பரபர பாட்டாளிகள்
சென்னை: பாமகவில் தந்தை ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் விரைவில் மோதல் முடிவுக்கு வரும் என்கின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களான மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம், தர்மபுரி வெங்கடேசன் ராமதாஸால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
நாளுக்கு நாள் பாமகவில் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள் வலுத்துக் கொண்டே போகிறது. தந்தை மகன் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது கட்சி இரண்டாக உடைபட்டது போல வந்து நிற்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை தலைவர் ஆக்கினார் ராமதாஸ்.
தொடர்ந்து கட்சியில் நிர்வாகிகள் நியமனம், தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் ஆகியவற்றை அன்புமணியே எடுத்து வந்தார். இந்த நிலையில் கட்சியில் நடந்த சில விவகாரங்கள் ராமதாஸுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பாமக மோதல்
இதை அடுத்து அன்புமணி ராமதாசை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதும் அன்புமணி ராமதாஸ் விழா குழுவுக்கு தலைமை ஏற்று இருந்த வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. ஆனாலும் அதிலும் ராமதாஸ் அன்புமணி ராமதாஸை குறி வைத்து பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தந்தை மகன் இடையே மோதல் இருப்பது வெட்ட வெளிச்சமான நிலையில் பலரும் அன்புமணி பின்னால் திரண்டனர்.
ராமதாஸ்
ராமதாஸ் நடத்திய கூட்டத்தையே புறக்கணிக்கும் அளவுக்கு நிர்வாகிகளின் செயல்பாடு இருந்தது. இதை அடுத்து கட்சியில் தனது செல்வாக்கு குறைகிறது என நினைத்த ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கட்சியை விட்டு நீக்கியதோடு முன்னாள் நிர்வாகிகளை அந்த பதவிகளில் அமர்த்தினார். ராமதாசுக்கு ஆதரவாக ஜி.கே மணி, எம்எல்ஏ அருள் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே இருக்கும் நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பின்னால் நிற்கின்றனர்.
பாமக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
குறிப்பாக மூன்று எம்எல்ஏக்களின் ஆதரவு அன்புமணிக்கு இருக்கிறது. இதை அடுத்து அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கான மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம், தர்மபுரி வெங்கடேசன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து அன்புமணி ஆதரவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்ததோடு வெளிப்படையாகவே அவர்கள் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
அன்புமணி முடிவு என்ன?
ஆனால் அது தங்களை கட்டுப்படுத்தாது என அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக மூன்று பேரும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு விசாரணைக்கு ஆட்சியாக வேண்டும் என கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் அன்பழகன் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக மூவருக்கும் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இது குறித்து "பாமக தலைவர் அன்புமணி என்ன முடிவு எடுக்கிறாரோ? அதையே நாங்களும் செய்வோம்!" என மூன்று எம்எல்ஏக்களும் கூறியிருக்கின்றனர் 3 எம்.எல்.ஏ.க்களும்...
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications