ஆவின் தயிர் -நெய் விலை உயர்வு! முதல் எதிர்ப்பை பதிவு செய்த பாமக! விலையை குறைக்க அன்புமணி புது யோசனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஆவின் தயிர் மற்றும் நெய் விலை உயர்த்தப்பட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

நெய் மற்றும் தயிர் விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் விலையை குறைக்க ஜிஎஸ்டி வரி விலக்கு பெறுவது தொடர்பாகவும் அரசுக்கும் ஆவின் நிர்வாகத்திற்கும் அன்புமணி புது யோசனை தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸின் டிவிட்டர் பதிவு விவரம் வருமாறு;

தயிர் -நெய்

தயிர் -நெய்

தமிழ்நாட்டில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது; ஏற்றுக் கொள்ள முடியாதது!

4 மாதங்களில்

4 மாதங்களில்

கடந்த மார்ச் மாதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன. அதன்பின் 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் மீண்டும் ஒரு விலை உயர்வை தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது!

என்ன நியாயம்?

என்ன நியாயம்?

தயிருக்கு 5% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டது தான் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 5% மட்டும் வரி விதிக்கப்பட்ட நிலையில், 20% விலையை உயர்த்துவதும், நெய் மீதான வரி உயர்த்தப்படாத நிலையில் அதன் விலையையும் அரசு உயர்த்துவதும் எந்த வகையில் நியாயம்?

வரி விலக்கு ஒன்றே வழி

வரி விலக்கு ஒன்றே வழி

குஜராத்தின் அமுல், கர்நாடகத்தின் நந்தினி போன்ற பால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு பெறப்பட்டுள்ள நிலையில், அதே போல் ஆவினுக்கும் பெற வேண்டுமே தவிர விலையை உயர்த்தக்கூடாது. விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+