இடையூறு தந்த செல்போன்கள்.. கடுப்பான ராமதாஸ்- பேசவா கிளம்பவா?
கடலூர்: கடலூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசிக் கொண்டிருந்த போது செல்போன் அழைப்புகளாலும் அதை எடுத்து பேசிய நிர்வாகிகளாலும் இடையூறு ஏற்பட்டதை அடுத்து கோபமடைந்த அவர் நான் பேசட்டுமா இல்லை கிளம்பட்டுமா என கேட்டார்.
Recommended Video
கடந்த முறை திண்டிவனத்தில் பாமக நடத்திய ஆலோசனை கூட்டத்தை போல் கடலூர் மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் யாருக்காக போராடி இடஒதுக்கீடு பெற்று தந்தோமோ அந்த வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கூடாது என வழக்கு போட்டுள்ளார்கள்.
ஆனாலும் தமிழக அரசு மேல்முறையீடு செய்து சரியாகவே செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் பாமக தோல்வியை சந்தித்ததற்கு காரணமே மாவட்டச் செயலாளர்கள்தான்.

மாடு மேய்க்கும் சிறுவன்
உங்களால் முடியாவிட்டால் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் போய் 1 லட்சம் வாக்குகளை உன்னால் பெற முடியுமா என கேட்பேன். அவன் முடியும் என கூறிவிட்டால் அவனையே மாவட்டச் செயலாளராக்குவேன். நம் கட்சி இளைஞர்களை நம்பித்தானே இருக்கிறது. இளைஞர்கள் நினைத்தால் வானத்தை கூட வில்லாக வளைக்கலாமே.

அன்புமணி கோட்டையில்
என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ எனக்கு தெரியாது, அன்புமணியை கோட்டையில் உட்கார வைக்க வேண்டும் என கூறிக் கொண்டிருந்தார். இவர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது சில நிர்வாகிகளுக்கு வந்த செல்போன் அழைப்பை ஏற்று அதில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ராமதாஸ் கடும் கோபம் கொண்டார்.

செல்போனை புடுங்கு
அவர் பேசுகையில் 23 லட்சம் வாக்குகளை நாம் முன்னொரு காலத்தில் பெற்றோம். அப்படி வாக்குகளை பெற்றுவிட்டு... எவன் பேசுறவன், இந்த செல்போனை எல்லாம் புடுங்கு.. செல்போனெல்லாம் புடுங்கு... போலீஸு நான் சொல்றேன் செல்போனை புடுங்கு. ஒரு செல்போனை கூட உங்களால் புடுங்க முடியாதா?

மாவட்டம்
மாவட்டம் (மாவட்டச் செயலாளர்) செல்போனை புடுங்கு, நான் பேசட்டுமா இல்ல போகட்டுமா.. (கூட்டத்திலிருந்து பேசுங்க அய்யா) நான் பேசணும்னு சொல்லிட்டு நீ பேசினா எப்புடி? நீ பேசினா எப்படி நான் பேசறது? அமைதியா இருங்க என கூறி தனது பேச்சை தொடர்ந்தார் ராமதாஸ்.
-
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications