ராமதாசுக்கு பொன்னாடை போர்த்திய எடப்பாடி.. அன்புமணிக்கு ஓபிஎஸ் சால்வை.. விக்ரமன் படம் போல பாசமழை
Recommended Video

சென்னை: தமிழக அரசியலில் அடுத்த திருப்பமாக, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார்.
அதிமுக-பாஜக கூட்டணி ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த பொதுத் தேர்தலில், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இருந்தன.
இம்முறையும், அதே கூட்டணியை தக்க வைப்பதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க அதன் தலைவர்கள் முன் வைத்த நிபந்தனை என்பது, பாமகவும் நமது கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதுதானாம்.

முதல்வருடன் சந்திப்பு
பாஜகவிற்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அதை பாஜக செவ்வனே செய்து முடித்துள்ளதாம். எனவே இரு கட்சிகள் நடுவே நிலவும், இறுக்கத்தை தளர்த்த, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சந்தித்தார். இதன் மூலம் கூட்டணியை அவர் உறுதி செய்துள்ளார்.

அன்புமணி
திமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியான நிலையில், பாஜக தலைமை, அன்புமணி ராமதாஸ் மூலமாக பாஜக கூட்டணியிலேயே பாமகவை தக்க வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

முதலில் அதிருப்தி
டாஸ்மாக், நீட் உள்ளிட்ட விவகாரங்களில், தொடர்ச்சியாக அதிமுக அரசை கடுமையாக குற்றம்சாட்டி வந்த ராமதாசுக்கு, அக்கட்சியோடு கூட்டணி வைப்பதில் உடன்பாடு இல்லை என்றும், இருப்பினும், இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதை ஏற்றதாகவும் தெரிகிறது.

இணக்கம் வேண்டும்
ராமதாஸ் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியானதால், பாமக, அதிமுக தொண்டர்கள் நடுவே இணக்கமாக தேர்தல் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இந்த இறுக்கத்தை உடைக்கவே, அதிமுக தலைவர்களை ராமதாஸ் சந்தித்தார். ராமதாசை நட்சத்திர ஹோட்டலில் பச்சை சால்வை போர்த்தி வரவேற்றார் முதல்வர் எடப்பாடி. அன்புணிக்கு ஓபிஎஸ் பொன்னாடை போர்த்தினார். அந்த இடமே விக்ரமன் படம் போல லாலாலாலா.. என்ற பிஜிஎம்முடன், அன்பு வெள்ளம் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருந்ததை போல இருந்தது.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications