சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊடகங்களில் நடுநிலை இல்லை.. பாமகவினர் விவாதங்களில் பங்கேற்க தடை.. ராமதாஸ் திடீர் டுவீட்

Google Oneindia Tamil News

Recommended Video

    Ramadoss Pressmeet: ஏண்டா.. பத்திரிகையாளர்களை அன்புடன் விளித்த டாக்டர் ராமதாஸ்!- வீடியோ

    சென்னை: ஊடகங்களில் நடுநிலைத்தன்மை இல்லாததால் பாமகவினர் யாரும் விவாதங்களில் பங்கேற்கமாட்டார்கள் என அக்கட்சியின் நிறுவனர் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தற்போது பல்கி பெருகிவரும் ஊடகங்களில் அன்றைய தினம் நடைபெறும் சுவாரஸ்ய விஷயங்களை வைத்து விவாதங்கள் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதற்காக குறிப்பிட்ட ஊடகத்தினர் அரசியல் கட்சியினரை விவாதத்துக்கு அழைப்பது வழக்கம்.

    PMK Ramadoss says that our party activist will not participate in tv debates

    அவ்வாறு அழைக்கும்பட்சத்தில் கட்சியினரால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை விவாதத்துக்கு அனுப்புவர். அது போல் அனுப்பும் விவாதங்களில் பாமகவினரை குற்றச்சாட்டியே பேசப்படுவதாகவும், அதற்கு உரிய விளக்கத்தை அளிக்க பாமகவினரை பேசவிடவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் ராமதாஸ் ஒரு டுவீட்டை அனுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் செய்தித் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்களில் நடுநிலையையும், அறத்தையும் பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டியிருக்கிறது.

    ஊடகங்களில் நடுநிலை திரும்பும் வரை ஊடக விவாதங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.

    English summary
    PMK Ramadoss says that our party activist will not participate in tv debates as there is no neutrality in Journalism.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X