Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்லாது செல்லாது! ராமதாஸ் நடத்துவது பொதுக்குழுவே இல்லங்க! அதிரடியாக அறிவித்த அன்புமணி! பரபர பாமக

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் டிசம்பர் 29ஆம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல, அதன் முடிவுகள் பா.ம.கவை கட்டுப்படுத்தாது என அன்புமணி தரப்பு கூறியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதல் உச்சத்தை தொட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே கட்சியில் பிளவு ஏற்பட்டு இருக்கும் நிலையில், நான் தான் கட்சியின் தலைமை என ராமதாஸ் கூறி வருகிறார்.

PMK Anbumani Ramadoss Ramadoss

அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் தங்களை தான் அங்கீகரித்துள்ளது. 2026 வரை கட்சி தலைவராக பணியாற்றும் தனக்கு உரிமை உள்ளது என அன்புமணி தரப்பு கூறி வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் இறுதி மாதத்தில் பாமகவின் புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

பாமக உட்கட்சி மோதல்

அந்த வகையில் 2026ஐ வரவேற்போம் என்ற தலைப்பில் புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு கூட்டமும் சிறப்பு பொதுக்குழு கூட்டமும் டிசம்பர் 29ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என ராமதாஸ் அறிவித்தார். இதில் கட்சியின் வளர்ச்சி செயல்பாடுகள், குறித்தும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும், செயற்குழு கூட்டம் காலை 10 மணி முதல் 11.30 மணி வரையும், பொதுக்குழு கூட்டம் 11.40 முதல் நடைபெறும் என கூறியிருந்தார். இதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என அறிவித்திருந்தார் ராமதாஸ்.

பாமக பொதுக்குழு சர்ச்சை

இந்நிலையில், சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல, அதன் முடிவுகள் பா.ம.கவை கட்டுப்படுத்தாது என அன்புமணி தரப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29&ஆம் தேதி சேலம் ஐந்து சாலை இரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய அறிவிப்பு எதையும் பாட்டாளி மக்கள் கட்சி தலைமை வெளியிடவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி

பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்.

அன்புமணி இராமதாஸ்

சென்னை உயர்நீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும் அவரைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரை தவறாகப் பயன் படுத்தி சேலத்தில் சட்டவிரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. தலைமை முறைப்படி தெரிவித்திருக்கிறது.

பாமக தலைமை அலுவலகம்

எனவே, சேலத்தில் 29ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறது." என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+