அரசியல் முட்டு சந்தில் ராமதாஸ்.. அதிமுகவுடன் கூட்டணியா? கேட்டை மூடிய எடப்பாடி.. அடிவருடிகள் அப்செட்!
சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் இணைந்திருக்கும் நிலையில் பாமகவின் நிறுவனரான ராமதாஸ் திமுகவுடன் பேச்சு நடத்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை காரணம் காட்டி ராமதாசை கூட்டணிக்குள் சேர்க்காத நிலையில் மீண்டும் அதிமுக கூட்டணி கதவை ராமதாஸ் தட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ராமதாஸுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என அன்புமணி தரப்பு தெள்ளத் தெளிவாக சொல்லி உள்ளது. இதை அடுத்து எந்த ரூபத்திலும் ராமதாஸ் தரப்புக்கு அதிமுக கூட்டணியில் இடமில்லை என திட்டவட்டமாக எடப்பாடி தரப்பு சொன்னதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. இதன் காரணமாக பாமக கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தது.

பாமக உட்கட்சி மோதல்
கட்சியின் கூட்டணி அரசியல் மற்றும் தேர்தல் திட்டங்கள் போன்ற விஷயங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளே இந்த பிரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார். அதிமுக தலைமை வகிக்கும் இந்த கூட்டணிக்கு முக்கிய பலமாக பாமக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அதே நேரத்தில், ராமதாஸ் தரப்பு ஆரம்பத்தில் திமுக கூட்டணியுடன் இணைய ஆர்வம் காட்டியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவின.
அன்புமணி - ராமதாஸ்
ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால் அந்த முயற்சி இறுதியில் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் பாமக கட்சியின் ஒற்றுமையை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரைக் மீண்டும் ஒன்றிணைக்க பாஜக மேலிடம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. தேர்தல் சூழலில் பாமக முழுமையாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் அது கூட்டணிக்கு கூடுதல் பலம் தரும் என்ற கணிப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்புமணி ராமதாஸ்
ஆனால் இந்த முயற்சிக்கு அன்புமணி ராமதாஸ் தரப்பு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ராமதாஸுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டில் அன்புமணி உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாஜக மேற்கொள்ளும் சமரச முயற்சிகள் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மற்றொரு பக்கம், ராமதாஸ் தரப்பு பாஜக-அதிமுக கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
எந்த வகையிலும் ராமதாஸ் அந்த கூட்டணிக்கு வரக் கூடாது என்ற கருத்தில் எடப்பாடி பழனிசாமியும் இருப்பதாக கட்சித் தரப்பில் கூறப்படுகிறது. கட்சி, சின்னம், பெயர், கொடி ஆகியவை அன்புமணி ராமதாஸூக்கு தான் என தேர்தல் ஆணையம் சொல்லிவிட்ட நிலையில், பெரும்பாலான நிர்வாகிகல் ஆதரவு அன்புமணிக்கு தான் உள்ளது. இதனால் தான் அதிமுக கூட்டணியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அவருக்கு 18 முதல் 20 சட்டமன்றத் தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாமக கூட்டணி
அதோடு, அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாமக கூட்டணியில் நிலைத்திருக்கவும், வட தமிழகத்தில் கூட்டணியின் வாக்கு வங்கியை பலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ராமதாஸ் தரப்பு மீது ஏற்கனவே அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே ராமதாஸ் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது.
அருள், ஜி கே மணி
விஜயுடன் கூட்டணி, திமுகவுடன் கூட்டணி, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி என பல யூகங்கள் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிமுக தரப்பிலும் பாமக தரப்பிலும் விசாரித்த போது ராமதாசை யாருமே கூட்டணியில் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை என்கின்றனர். மேலும், கடைசி நேரத்தில் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்றால் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சொல்லும் பாட்டாளிகள் அருள், ஜி கே மணி உள்ளிட்டோர் கிளப்பி விடுவது தான் இது போன்ற தகவல்கள் என்றும் சொல்லப்போனால் அரசியலில் முட்டு சந்தில் நிற்கிறார் ராமதாஸ் என்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications