சட்டென மாறிய கிளைமேட்.. ஆசைகாட்டி அய்யாவை மோசம் செய்த அறிவாலயம்? அறிக்கையில் அனல் பறக்குது பாருங்க!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பாமக ராமதாஸ் தரப்பில் எதிர்பாராத குழப்பம் ஒன்று உருவாகியுள்ளது. இதுவரை திமுகவுக்கு ஆதரவாக தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வந்த பாமக நிறுவனர் ராமதாஸ்,அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன. தன்னை கூட்டணியில் சேர்க்காததால் கோபத்தில் இருக்கும் அவர், அக்கட்சி ஆட்சியை விமர்சித்து அறிக்கைகள் வெளியிட தொடங்கியுள்ளார் என்கின்றனர்.
திமுக-அதிமுகவுக்கு அடுத்தபடியாக சில தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யக் கூடிய வாக்கு வங்கி கொண்ட கட்சியாக பாமக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த வலிமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் உட்கட்சி மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு தொடக்கத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையிலான கருத்து வேறுபாடு வெளிப்படையாக வெடித்தது. அதன் பின்னர், பாமக யாருக்கு? என்ற கேள்வியே கட்சிக்குள் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாமக கூட்டணி குழப்பம்
ஒருவருக்கொருவர் போட்டியாக நிர்வாகிகளை நீக்குவது, மாவட்ட அமைப்புகளை கலைப்பது என இரு தரப்பும் கடும் மோதலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவித்த ராமதாஸ், பாமகவின் ஒரே தலைவர் தான் எனவும் உரிமை கொண்டாடினார். இதனால் கட்சியின் சின்னம், அதிகாரப்பூர்வ தலைமை யாருக்கு என்ற விவகாரம் தேர்தல் ஆணையம் வரை சென்றது. இந்த சூழலில், தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவர் என அங்கீகரித்து, தேர்தல் தொடர்பான ஆவணங்களில் கையொப்பமிடும் அதிகாரத்தையும் வழங்கியது.
அன்புமணி ராமதாஸ்
இதனால் பெரும் பின்னடைவை சந்தித்த ராமதாஸ், அந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார். தற்போது அந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான், அன்புமணி ராமதாஸ் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவிப்பு வெளியானது. இது ராமதாஸுக்கு இரண்டாவது பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதனையடுத்து மகன் அன்புமணிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த ராமதாஸ், திமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பை தீவிரமாக ஆராய்ந்து வந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.
திமுக கூட்டணி
ஆனால் அந்த பேச்சுவார்த்தையில், ராமதாஸ் வைத்த நிபந்தனைகளே அவருக்கு தடையாக மாறியதாக சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணியில் அன்புமணிக்கு வழங்கப்பட்ட அளவுக்கு இணையான தொகுதிகள் திமுக கூட்டணியிலும் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். குறைந்தபட்சமாக 15 தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் திமுக தரப்பில், தற்போதைய கூட்டணி சமன்பாடுகளை காரணம் காட்டி, 4 முதல் 5 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்ற தெளிவான பதில் அளிக்கப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தல்
இந்த பதில் ராமதாஸை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. அதற்கான வெளிப்பாடாகவே, கடந்த சில மாதங்களாக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி வந்த ராமதாஸ், கடந்த நான்கு நாட்களாக திமுக அரசை விமர்சித்து தொடர் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். வழக்கமாக புள்ளி விபரங்களுடன் அறிக்கை விடும் ராமதாஸ் திமுக தலைமையை பாராட்டியே வந்தார். குறிப்பாக உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்ட போது முதல் ஆளாக திமுக தலைவருக்கு நன்றியும் வாழ்த்தும் சொன்னவர் ராமதாஸ் தான்.
திமுக மீது விமர்சனம்
தொடர்ந்து திமுகவும் ராமதாஸை கூட்டணியில் சேர்க்க பேசி வந்த நிலையில் சில காரணங்களால் அது கைகூடாமல் போனது. இந்த நிலையில் கடைசி வரை பேச்சுவார்த்தை நடத்தி தன்னை ஏமாற்றி விட்டதாக கடும் கோபத்தில் இருக்கிறார் ராமதாஸ். அதனால்தான் அறிக்கைகளில் அனல் காட்டி வருகிறார். இன்று கூட 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு திமுக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கடந்த சில தினங்களாக இட ஒதுக்கீடு என்ற வார்த்தையையே உபயோகிக்காத ராமதாஸ் தற்போது கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டதால் திமுகவை விமர்சித்து இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி












Click it and Unblock the Notifications