ராமதாஸுக்கு அதிர்ச்சி கொடுத்த விக்கிரவாண்டி வேட்பாளர்! அன்புமணி அணிக்கு டைவ் அடித்ததால் நீக்கம்!
சென்னை: விக்கிரவாண்டி தொகுதியில் ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் புகழேந்தி, இன்று அன்புமணியைச் சந்தித்து அவரது தலைமையிலான பாமகவில் ஐக்கியமானார். அணி மாறிய அவரை கட்சியை விட்டு நீக்குவதாக, ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக, நாதக, தவெக கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, ராமதாஸ் தரப்பு பாமகவும், சசிகலா தொடங்கிய புதிய கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.

பாமகவில் ராமதாஸ், அன்புமணி என இரு பிரிவாக பிளவு பட்டுள்ளது. வரும் தேர்தலில் இரு தரப்பினரும் போட்டி போட்டு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ராமதாஸ், பல்வேறு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இதில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அன்புமணி - ராமதாஸ்தரப்பு வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றனர்.
இதில் விக்கிரவாண்டி தொகுதியில், அன்புமணி தரப்பில் மயிலம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ சிவக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதியில் ராமதாஸ் அணி சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், புகழேந்தி சென்னையில் இன்று அன்புமணியை சந்தித்து, அவரது அணியில் இணைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமதாஸ், தனது தரப்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புகழேந்தி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, அன்புமணி தரப்பினர், கட்சியினரை மிரட்டுவதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார். பாட்டாளி மக்கள் கட்சியை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த தேர்தலை பயன்படுத்தி வருபவர்கள், உண்மையான பாட்டாளிகள் எங்கள் பக்கம் இருப்பதால், அது அவர்களுக்கு தோல்வியைத் தரும் என்கிற ஆத்திரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூட பாராமல் கொலை மிரட்டல் விடுப்பதும், சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாகவும், அநாகரிகமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டும் வருகின்றனர். கட்சியின் உயர் பொறுப்பான பொதுச் செயலாளர் பொறுப்பில் இருப்பவருக்கே இது போன்ற அச்சுறுத்தல்கள் நடப்பது அனுமதிக்க முடியாது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆதலால் அவருக்கு தகுந்த பாதுகாப்பினை வழங்கிட வேண்டும்.
மேலும், தேர்தல் நெருங்க, நெருங்க அவர்களின் அடாவடி, அநாகரிகமான செயல்கள் எந்த எல்லைக்கும் செல்லுமளவுக்கு அவர்களது செயல்பாடுகள் உள்ளன. கருத்தியல் ரீதியாகவோ, தங்களின் செயல்பாடுகளின் மூலமாகவோ மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியாதவர்கள், களத்தில் நிற்கும் வேட்பாளர்களையும், அவர்களுக்காக பணியாற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் அச்சுறுத்தியும், ஆசை காட்டியும் தேர்தல் பணிகளை முடக்கப் பார்க்கின்றனர்.
இதுபோன்ற அடாவடி செயல்கள், அத்துமீறல்கள், வந்தவாசி தொகுதியில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்க எங்களது சார்பில் போட்டியிடுகின்ற ஒவ்வொரு தொகுதிகளிலும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் பணிகளை செய்வோருக்கு கொடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்களில் இருந்து நேர்மையாக தேர்தல் நடத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி, தேர்தல் முடிவு அறிவிக்கின்ற வரையில் எங்களது தரப்பு வேட்பாளர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் கொடுப்பதோடு, தாக்குதல்கள் நடத்துவதற்கும் அவர்கள் பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வருகின்றனர். எனவே அந்தந்த மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் எங்கள் அணியின் வேட்பாளர்களுக்கும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications