கண்கள் பனிக்க.. இதயம் இனிக்க! பாமக பஞ்சாயத்துக்கு எண்ட் கார்டு.. அன்புமணியின் அடுத்த மூவ் என்ன?
சென்னை: பாமகவில் நிலவி வந்த உட்கட்சி மோதல் புயல் சற்று ஓய்ந்திருக்கிறது. ஒரு வாரமாக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் தந்தை மகன் இடையே சமாதான பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்து இருப்பதாகவும், விரைவில் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என்கின்றனர் பாமகவினர். மேலும் வன்னியர் சங்க மகளிர் பெருவிழாவில் அன்புமணி பங்கேற்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
தமிழகத்தின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான பாமகவில் கடந்த சில தினங்களாகவே மோதல் வலுத்து வந்தது. தந்தை மகன் இடையேயான மோதல் நிர்வாகிகள் வரை பிளவுபடும் அளவுக்கு சென்றது. தற்போது பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.
காரணம் ராமராஸ் புதிய நிர்வாகிகளை அறிவித்தது தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாமக தலைவராக நியமனம் செய்யப்பட்ட அன்புமணி கட்சியில் இளைஞர்கள் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதற்காக மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர் பதவிகளை அளித்தார்.

பாமக மோதல்
இந்த நிலையில் தந்தை மகன் இடையேயான மோதலால், ஏற்கனவே குற்றச்சாட்டுக்கு ஆளாகி கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு பதவி கொடுத்தார் ராமதாஸ். இதனையடுத்து மாவட்டங்களில் போட்டி பொதுக்குழு, செயற்குழு நடத்தப்பட்டு வருகிறது. தலைமையை பொறுத்தவரை அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், செயல் தலைவர் பதவியில் தொடர்வதாக ராமராஸ் கூறுகிறார். ஆனால், தேர்தல் ஆணைய விதிப்படி நான்தான் தலைவர், பொது குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு தான் அதிகாரம் என அன்புமணி உறுதியாக நிற்கிறார்.
ராமதாஸ்
தேர்தல் ஆணையம் வரை விவகாரம் சென்றிருக்கிறது. இந்நிலையில் பாமகவில் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது என்கிறனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். இது தொடர்பாக பேசிய நிர்வாகிகள்," திமுக கூட்டணியில் சலசலப்புகள் எழத் தொடங்கி இருக்கும் நிலையில் அதிமுக, பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் யார் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற குழப்பம் அதிமுகவுக்கு இருக்கிறது.
அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியில் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்தால் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் சுணக்கம் ஏற்படும். இதனால் தொகுதி பங்கீட்டிலும் சிக்கல் எழலாம். இதனால் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மூத்த நிர்வாகிகள் பேச்சு வார்த்தையை தொடங்கி இருக்கின்றனர். அன்புமணி ஆதரவு நிர்வாகிகள் எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியின் மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக பாட்டாளி மகளிர் பெருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வன்னியர் சங்க பெருவிழாவை அன்புமணி நடத்திய நிலையில் தற்போது இதனை ராமதாஸ் முன்னெடுத்திருக்கிறார். அதில் அன்புமணியை கலந்து கொள்ள வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அன்புமணி அதற்கு ஒப்புக் கொண்டால், நிச்சயம் பாட்டாளி மக்கள் கட்சியில் மோதல் முடிவுக்கு வந்து விடும்.
முடிவுக்கு வரும் மோதல்
பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமல்லாது வெளியில் இருக்கும் சில முன்னணி தலைவர்களும் பாமக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திமுக, அதிமுகவில் இருந்து கூட முன்னாள் அமைச்சர்களும் இந்நாள் அமைச்சர்களும் கட்சி ஒன்று சேர வேண்டும் என விரும்புகின்றனர். இப்போது வரை மோதல்தான் இருக்கும் நிலையில் பிளவு ஏற்படவில்லை. தொடர்ந்து இதேபோக்கு நீடித்தால் பிளவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் நடந்தது போல பாமகவிலும் நடக்கக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். எதற்காக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வருகிறோம். விரைவில் நல்லது நடக்கும்' என்கின்றனர்.












Click it and Unblock the Notifications