வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க.. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்! - ராமதாஸ்
மயிலாடுதுறை: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் மாநில மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இதில் பேசிய ராமதாஸ், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாநாட்டில், பெண்களுக்கு வேலைவாய்ப்பில்லா திண்டாட்டம் நீங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும், முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், நீட் தேர்வுக்கு செல்லும் மாணவிகள் சோதனை என்ற பெயரில் மன வேதனைக்கு உள்ளாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உட்பட 14 தீர்மானங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

மாநாட்டில் பேசிய ராமதாஸ், "10.5% உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் நடத்தினால் தமிழகம் தாங்காது. எனவே தமிழ்நாடு அரசு வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை உடனடியாக கொடுக்க வேண்டும். என்னுடைய அருமை நண்பர் கலைஞர் 20% ஒதுக்கீட்டை அளித்தார். சாதி வாரி கணக்கெடுப்பது நடத்துவதற்கு முதல்வருக்கு என்ன தயக்கம்? அவர் தந்தையை மிஞ்சிய தனையாக இருக்க வேண்டும். அவர் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
தமிழக முதல்வர் அவர்களே, தமிழ்நாட்டில் நிலவும் போதை கலாச்சாரத்தை ஒழிக்க ஆட்சியை மூன்று மாதங்களுக்கு எங்களிடம் கொடுங்கள் என்று நாங்கள் கேட்க போவதில்லை. ஆனால் 10 அதிகாரிகளை எங்களிடம் அனுப்பி வையுங்கள். நாங்கள் அவர்களுக்கு போதை கலாச்சாரத்தை ஒழிப்பது பற்றிய யோசனைகளை தெரிவிக்கிறோம். அவர்கள் உங்களிடம் அதை கூறுவார்கள். நீங்கள் நடைமுறைப்படுத்தி பாருங்கள் நிச்சயமாக தமிழ்நாட்டில் போதை ஒழிக்கப்படும். இதற்காக நாங்கள் ஆட்சியில் வந்துதான் அதை ஒழிக்க வேண்டும் என்று இல்லை. உங்களாலேயே இதை ஒழித்து விட முடியும்.
சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார். அப்போது அவர் தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது என்பதற்காக சிறு உதாரணத்தை கூறியிருந்தார். தஞ்சை பெரியார் கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் பெருமை குன்றிவிடக்கூடாது என்பதற்காக தனயனான ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சை பெரிய கோயிலை விட உயர் குறைவாக கோயிலை கட்டியிருந்தார்" என்று பேசியிருந்தார்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications