இந்த கையில் கொடுத்து.. அந்த கையில் பிடுங்கிறுவாங்க! டாஸ்மாக்கு போகும் பொங்கல் பரிசு! விளாசிய செளமியா
சென்னை: தமிழத்தில் மக்களின் வரிப்பணத்தை பொங்கல் போனஸாக கொடுத்து, மீண்டும் டாஸ்மாக் மூலம் திரும்ப பெறும் திட்டமே குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 3000 வழங்கும் திட்டம் என்றம், திமுக அரசு பெரிய திட்டங்களை அறிவித்து விட்டு அவற்றை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி விமர்சித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும் பசுமை தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணி, தனது 'சிங்கப் பெண்ணே எழுந்து வா' என்ற தலைப்பிலான மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கினார்.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வயலப்பாடி பகுதியில் மகளிர் உரிமை மீட்பு பயணம் நடைபெற்றது. பாமக சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு பேசினார்.
சௌமியா அன்புமணி
நிகழ்ச்சியில் பாமக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அமைப்பு நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சௌமியா அன்புமணிக்கு மேளதாளத்துடன் வான வேடிக்கையுடன் மலர் தூவி பெண்கள் வரவேற்றனர். தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி," திமுக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் அனைத்துமே கிடப்பில் போடப்படும் திட்டங்கள் மட்டும் தான்.
டாஸ்மாக்
திமுக அரசு பெரிய திட்டங்களை அறிவித்து விட்டு அவற்றை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும் மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம் உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு சேமித்து வைக்க கிடங்கு வசதிகளை ஏற்படுத்தி தராமல் டாஸ்மாக் மதுபானங்களுக்கு மட்டுமே கிடங்குகளை அமைத்துள்ளனர்.
பொங்கல் பரிசு
மேலும் சிறப்பு பொருளாதார மண்டலம். மருத்துவக் கல்லூரி போன்ற பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அறிவித்து விட்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் பெரம்பலூர் மாவட்ட மக்களை திமுக அரசு வஞ்சித்து விட்டது. சௌமியா அன்புமணி தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது.
அன்புமணி ராமதாஸ்
மக்களின் வரிப்பணத்தில் இருந்து மூவாயிரத்தை கொடுத்துவிட்டு அதனை மீண்டும் டாஸ்மாக் கடை மூலம் திரும்ப பெறுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இப்படி ஏழை எளிய மக்களை வஞ்சித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல் பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துவிட்டு பொது மக்களை ஓட்டு போடும் மெஷின்களாக நடத்தி வருகின்றனர் என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர் டாஸ்மாக்கை ஒழித்திட ஏழை எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் செழித்திட அன்புமணி பக்கம் நீங்கள் அனைவரும் நிற்க வேண்டும்." என்றார்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications