சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படி ஆகி போச்சே.. இதை எதிர்பார்க்கலையே.. குழப்பம் + அதிருப்தியில் பாமகவினர்!

கூட்டணியால் வட மாவட்ட பாமக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அவ்வளவு கடுமையாக விமர்சித்துவிட்டு மீண்டும் அதிமுகவிடமே சரணடைந்த ராமதாஸ்- வீடியோ

    சென்னை: இப்படி ஆகிபோச்சே.. என்ன செய்யறதுன்னு பெரிய தர்மசங்கடத்தில் உள்ளனராம் பாமகவினர்!

    ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாறி மாறி கூட்டணி வைப்பார் என்று தெரியும்... யார் நிறைய சீட் தருகிறார்களோ அவர்களுடன் சேர்ந்து கொள்வார் என்பதுதான் கடந்த கால வரலாறு காட்டிய சம்பவம்!

    ஆனால் இந்த முறை கூட்டணி என்பது பாமக தொண்டர்கள் பலருக்கு ஷாக்தான். மத்திய, மாநில அரசுகளின் ஒவ்வொரு சம்பவத்தையும் விலாவரி அறிக்கைகளாக வெளியிட்டு கண்டித்து வந்தார் ராமதாஸ்.

    பாமக கூட்டணி

    பாமக கூட்டணி

    இந்த அறிக்கைகளை படித்தபின்பு டாக்டருக்கு ஏற்பட்ட அதே கோபம், ஆத்திரம்தான் தொண்டர்களுக்கும் அதிமுக-பாஜக அரசு மீது ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்படி திடுதிப்பென்று கூட்டணி வைத்து கொண்டால், தொண்டர்களின் மனநிலையும் உடனடியாக ஒரே நாளில் மாறும் என்றும், அதிமுக-பாஜகவை மனதளவில் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் பாமக தலைமை எப்படி எதிர்பார்க்கிறது?

    விஷ்ணுபிரசாத்

    விஷ்ணுபிரசாத்

    ஏற்கனவே பாமகவில் உள்ள பெண் நிர்வாகி ராஜேஸ்வரி கட்சியிலிருந்து வெளியே வந்தார். அடுத்ததாக நடிகர் ரஞ்சித் வந்துவிட்டார். உண்மையிலேயே நடிகர் ரஞ்சித் கேட்கும் கேள்விகளுக்கு பாமகவால் ஒருபதிலுமே சொல்ல முடியாதுதான். அதேபோலதான் விஷ்ணுபிரசாத்தும். திமுகவுடன் பாமகவை கூட்டணியில் இணைக்க எடுத்த முயற்சி தோல்வி அடைந்தாலும் அவர் கேட்கும் கேள்விகளும் நியாயமாகவே இருக்கிறது.

    வாக்கு சேகரிப்பு

    வாக்கு சேகரிப்பு

    இப்போது இதே மனநிலைதான் தொண்டர்களுக்கும் உள்ளதாம். அதிமுக, இப்படி உள்ளே நுழைந்து சொந்த பந்தத்துக்குள்ளேயே பிரச்சனையை உண்டாக்கிவிட்டதே என்று வருத்தப்படுகிறார்களாம். இவ்வளவு நாள் எதிர்த்துவிட்டு, எப்படி இனிமேல் தொகுதியில் இறங்கி அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க போகிறோம், என்னென்ன சொல்லி வாக்கு சேகரிப்பது என்றே தெரியாமல் பாமக தொண்டர்கள் விழிக்கிறார்களாம்.

    அன்புமணி ராமதாஸ்

    அன்புமணி ராமதாஸ்

    டாக்டர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பு.. அதேசமயம், என்னதான் இருந்தாலும், ராமதாஸை, வன்னியர் சமுதாயம் கைவிடாது என்று கள நிலவரமும் சொல்லிச் சொல்கிறது.

    English summary
    PMK Volunteers dissatisfied with the coalition with ADMK-BJP
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X