சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

20 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு.. கூட்டணி ஒப்பந்தத்தில் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு-வீடியோ

    சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு, பாமக ஆதரவு அளிக்கும் என்று தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

    அதிமுக மற்றும் பாமக நடுவே வரும் லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    PMK will support aiadmk for the upcoming 20 assembly by election

    பாமகவுக்கு லோக்சபா தொகுதியிலும் ஒரு ராஜ்யசபா தொகுதியில் ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளது அதே நேரம் தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் போது அதில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்று ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது.

    ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதாக 18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர திருப்பரங்குன்றம் (ஏ.கே.போஸ்) மற்றும் திருவாரூர் (கருணாநிதி) சட்டசபை உறுப்பினர்களின் மரணத்தை அடுத்து, அந்த தொகுதிகளும் காலியாக உள்ளன.

    இந்த 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக பாமக, இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கெல்லாம் இடைத் தேர்தலில், பாமக போட்டியிடப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

    English summary
    PMK will support aiadmk for the upcoming 20 assembly by election in Tamilnadu, says Lok Sabha Alliance pact.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X