"மகா கவிதை".. கவிஞர் வைரமுத்து எழுதிய புதிய புத்தகம்.. வெளியான சுவாரசியமான அறிமுக வீடியோ!
சென்னை: கவிஞர் வைரமுத்து மகா கவிதை என்ற பெயரில் புதிதாக புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளார். இது தொடர்பாக அறிமுக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
கவிஞர் வைரமுத்து சினிமா பாடல்கள் தாண்டி தமிழ் இலக்கிய உலகிற்கு தொடர்ந்து பல சேவைகளை புரிந்து வருகிறார். அவர் எழுதிய நாவல்கள், நூல்கள் பல மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. 1980 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கவிஞராக வைரமுத்து நுழைந்தார்.

அவரது 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், அவர் 7,500க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் கவிதைகளை எழுதியுள்ளார். இந்தியாவின் முன்னணி கவிஞர்களில் ஒருவராக வைரமுத்து உள்ளார்.
ஒரு தேசிய விருது வாங்குவதே பெரிதாக உள்ள நிலையில் வைரமுத்து இதுவரை ஏழு தேசிய விருதுகளை வென்றுள்ளார். எந்த இந்திய பாடலாசிரியருக்கும் இதுவரை கிடைக்காத கவுரவம் இது. அவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் சாகித்ய அகாடமி விருது ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
புத்தகங்கள்: இதுவரை வைரமுத்து தமிழ் மொழியில் கவிதைகள் மற்றும் நாவல்கள் அடங்கிய 37 புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் பல ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ரஷ்யன் மற்றும் நார்வேஜிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல புத்தகங்கள் தமிழ்நாட்டில் அதிக விற்பனை ஆன புத்தகங்கள் என்ற சாதனைகளை படைத்துள்ளன.
இதுவரை அவரது படைப்புகள் கிட்டத்தட்ட 3 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. 1991-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மதுரையில் ஒரே நாளில் அவரது நான்கு நூல்கள் பிரமாண்டமாக வெளியிடப்பட்டன. இந்த நிலையில்தான் கவிஞர் வைரமுத்து மகா கவிதை என்ற பெயரில் புதிதாக புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளார். இது தொடர்பாக அறிமுக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
உலகத் தமிழ் உறவுகளே!
— வைரமுத்து (@Vairamuthu) September 1, 2023
வணக்கம்
இளைய தலைமுறையின்
அறிவை விரிவு செய்யவும்
அகிலம் காக்கவும்
ஆகாயம் அளக்கவும்
அண்டம் கடக்கவும்
என் உயிரை
ஊற்றி ஊற்றிச் செய்த படைப்பு
ஆசை ஆசையாய்
அறிமுகம் செய்கிறேன் pic.twitter.com/3amUuhXEZ0
இது பற்றி போஸ்ட் செய்துள்ள அவர், உலகத் தமிழ் உறவுகளே!
வணக்கம்
இளைய தலைமுறையின்
அறிவை விரிவு செய்யவும்
அகிலம் காக்கவும்
ஆகாயம் அளக்கவும்
அண்டம் கடக்கவும்
என் உயிரை
ஊற்றி ஊற்றிச் செய்த படைப்பு
ஆசை ஆசையாய்
அறிமுகம் செய்கிறேன், என்று கூறி உள்ளார்.
தனது புதிய புத்தகமான "மகா கவிதை" புத்தகத்திற்கான அறிமுக வீடியோவையும் இதில் வைரமுத்து இணைத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications