வள்ளுவர் மறை.. வைரமுத்து உரை! எப்படி இருக்கும்? இதோ.. ஒரு பதச்சோறு
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய வள்ளூவர் மறை, வைரமுத்து உரை எனும் நூல் ஜூலை 13ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார். இந்நிலையில் இந்த நூல் எப்படி இருக்கும் என்பதற்கான விளக்கத்தை வீடியோ மூலம் வைரமுத்து வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின், என்கிற 969வது குறளுக்கு காலங்காலமாக ஒரு பிழைப்பட்ட பொருளே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. 'கவரி மான்' என்று பொருள் கொண்டு ஒரு மயிர் உதிர்ந்து விட்டாலும், கவரி மான் இறந்துவிடும். அதுபோல, மானத்தை இழந்தவர்கள் உயிரிழந்துவிடுவார்கள் என்பது சொல்லப்பட்டு வந்த பொருள்.

ஒரு மயிர் உதிர்வது என்பது எந்த விலங்குக்கும் எளிதான விஷயம்தான். அது வளர்சிதை மாற்றம்தான். ஒரு மயிர் உதிர்வதால் எந்த விலங்கும் இறந்துவிடுவதாக அறிவியல் கூறவில்லை. இந்த குறளுக்கு நேரிய பொருள், அறிவியல் கூறிய பொருளை எழுதியுள்ளேன்.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
வள்ளுவர் மறை
— வைரமுத்து (@Vairamuthu) July 4, 2025
வைரமுத்து உரை
எப்படி இருக்கும்?
இதோ...
ஒரு பதச்சோறு#திருக்குறள் | #திருவள்ளுவர்#வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை pic.twitter.com/tsMySwGEVH
இந்த குறளில் 'கவரி மா' என்பதுதான் பொருளே தவிர, கவரி மான் என்பது அல்ல. சொல்லாட்சி, கவரி மா என்றுதான் இருக்கிறது. மா என்றால் விலங்கு. உடலில் கற்றை முடியை கவரியாக கொண்டு குளிரை தாங்கிக்கொண்டிருக்கும் பனி நாட்டு விலங்கு. அந்த கற்றை முறை முழுவதும் விழுந்துவிட்டால் குளிர் தாங்காமல் அந்த விலங்கு இறந்துவிடும்.
அதுபோல மானமுள்ள உயர்ந்த சான்றோர், தங்கள் மானத்திற்கு இழுக்கு நேர்ந்துவிடின் இறந்துவிடுவர் என்று எழுதியிருக்கிறேன். அறிவுலகம் இதை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன்" என கூறியுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம்! வைரமுத்து புகழாரம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications