பூமிக்கும் நிலவுக்கும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது இந்தியா.. இது மானுட வெற்றி.. வைரமுத்து வாழ்த்து
சென்னை: இஸ்ரோ விஞ்ஞானிகளின் கைகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்கிறோம் என்று சந்திரயான் வெற்றிக்காக வாழ்த்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து. இது மானுட வெற்றி என்று குறிப்பிட்டுள்ள வைரமுத்து அந்த நிலாவத்தான் நாம கையில புடிச்சோம் இந்த லோகத்துக்காக என்று தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக வரலாற்றில் இந்திய விண்வெளி ஆய்வுத் துறை சரித்திரமிக்க சாதனையைப் படைத்துள்ளது. ஆம், விண்ணுக்கு ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் இன்று மாலை சரியாக 6.04 மணியளவுக்கு நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற்றுள்ளது. இதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக கால்பதித்த நான்காவது நாடாக இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. உலக வரலாற்றில் இந்திய விண்வெளி ஆய்வுத் துறை பெரிய அளவிலும் பெருமையாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்த வெற்றியை நாட்டு மக்கள் வெற்றியுடனும் பெருமிதத்துடனும் கொண்டாடி வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். பூமிக்கும் நிலவுக்கும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது இந்தியா என்று குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து.
பூமிக்கும் நிலவுக்கும்
— வைரமுத்து (@Vairamuthu) August 23, 2023
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது
இந்தியா
ரஷ்யா அமெரிக்கா சீனா
என்ற வரிசையில்
இனி இந்தியாவை எழுதாமல்
கடக்க முடியாது
இஸ்ரோ விஞ்ஞானிகளின்
கைகளைத் தொட்டுக்
கண்களில் ஒற்றிக்கொள்கிறோம்
இது மானுட வெற்றி
அந்த நிலாவத்தான்
நாம கையில புடிச்சோம்
இந்த லோகத்துக்காக… pic.twitter.com/vtd5fqQKoz
ரஷ்யா அமெரிக்கா சீனா என்ற வரிசையில் இனி இந்தியாவை எழுதாமல் கடக்க முடியாது.. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கைகளைத் தொட்டுக்
கண்களில் ஒற்றிக்கொள்கிறோம்.. இது மானுட வெற்றி என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
அந்த நிலாவத்தான் நாம கையில புடிச்சோம் இந்த லோகத்துக்காக இது போதாது என்று குறிப்பிட்டுள்ள வைரமுத்து நிலா வெறும் துணைக்கோள்
நாம் வெற்றி பெற - ஒரு விண்ணுலகமே இருக்கிறது என்றும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications