Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘என் உயிரையே திருப்பித் தந்திருக்கிறீங்க சார்’. உருகிய வீராங்கனை.. கலங்கிய உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். யதமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை நிகழ்ச்சியில் பேசிய வீராங்கனை, என் உயிரையே திருப்பித் தந்திருக்கிறீங்க என்று உதயநிதி செய்த உதவியை உருக்கமாக நினைவு கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சாம்பியன் ஆஃப் தமிழ்நாடு என்கிற பெயரில் விளையாட்டுத்துறை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் விளையாட்டு துறையில் தடம் பதித்த வீரர் வீராங்கனைகளை மேடையேற்றி பாராட்டி, அரசின் சாதனைகள் நினைவு கூறப்பட்டன. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Champions of Tamilnadu

உயிரையே திருப்பித் தந்திருக்கிறீங்க

இந்த நிகழ்ச்சியில் போல்ட் வால்ட் வீராங்கனை பவித்ரா பேசுகையில், "நான் கடந்த 15 வருடங்களாக போல்ட் வால்ட் செய்து கொண்டிருக்கிறேன். 2023 வருடம் ஏசியன் இன்டோர் மெடல் வென்ற பிறகு உங்களை (உதயநிதி) பார்த்தேன். சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். கடந்த வருடம் மே மாதம் எனக்கு பெரிய உதவி செய்தீர்கள். அது உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா" என கேட்டவர், "நீங்கள் என் உயிரையே திருப்பித் தந்திருக்கிறீங்க சார்.

2025 மே 23 ஆம் தேதி பயிற்சியின் போது நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன், மருத்துவமனையில் அனுமதித்தபோது எனக்கு மூளையில் ரத்தக்கசிவு" என்றனர். உடனடியாக துறை ரீதியாக உங்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு இரவோடு இரவாக என்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றைக்கு இரவே என் வங்கிக் கணக்கிற்கு ரூ.4 லட்சம் வந்தது. எந்த தடையும் இல்லாமல் சிகிச்சை கொடுத்தனர்.

கலங்கிய உதயநிதி

இப்போது குணமாகி இங்கே நிற்கிறேன். என் உயிரையே திருப்பி தந்திருக்கிறீங்க. இது எல்லாராலும் திருப்பி தர முடியாது. ரொம்ப நன்றி சார்" என்றவர். "தமிழ்நாடு சாம்பியன் பவுண்டேசன் உருவாக்கி, உங்களை போன்று கஷ்டப்படுவோருக்கு எப்படி உதவி செய்ய தோன்றியது" என கேள்வி எழுப்பினார். அதற்கு உதயநிதி, "3 வருடங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த திறமையான ஒரு சைக்கிளிங் வீராங்கனைக்கு சைக்கிள் உள்ளிட்ட போதிய உபகரணம் இல்லை என்று பத்திரிகையில் செய்தி வெளியானது.

அதைப் பார்த்து அவருக்கு உரிய உபகரணங்கள் வாங்கித்தர சொன்னேன். அரசுத்துறையில் ஒரு பைல் அப்ரூவல் ஆகி வருவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகும் என்றனர். மேலும் அது ரூ.15 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த சைக்கிள். அவர்களுக்கு ஒரு மாதம் கழித்து கொடுத்து எந்தப் பயனும் இல்லை. உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். பள்ளிக் கல்வித்துறையில் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் உள்ளது.

நோக்கம்

முன்னாள் மாணவர்கள் மற்றும் சிஎஸ்ஆர் நிதியில் பள்ளிக் கூடங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தான் அதன் நோக்கம். அதை பின்பற்றி தான் தமிழ்நாடு சாம்பியன் பவுண்டேசன் தொடங்கப்பட்டது. முதலமைச்சர் தன் சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் கொடுத்தார். அதுதான் முதல் நிதி. இதன் மூலம் 1,000 வீரர்களுக்கு இந்த 3 வருடங்களில் ரூ.30 கோடி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+