Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இருந்து ஊருக்கு போறீங்களா..? ரூட்டே மாறிடுச்சு.. பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயுத பூஜை விடுமுறையைத் தொடர்ந்து தென் மாவட்டங்கள் செல்வோருக்கு போலீசார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றங்களை செய்து காவல்துறை சார்பில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறையையொட்டி, 3 ஆயிரத்து 190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

ayudha pooja chennai police

இந்நிலையில், ஆயுத பூஜை விடுமுறையைத் தொடர்ந்து தென் மாவட்டங்கள் செல்வோருக்கு செங்கல்பட்டு காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆயுத பூஜை (புதன்), காந்தி ஜெயந்தி (வியாழன்) விடுமுறையைத் தொடர்ந்து வார இறுதி நாட்களின் விடுமுறையும் வருவதால், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மாவட்டங்களுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில், சாலை வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் முக்கிய போக்குவரத்து அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர். அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"செங்கல்பட்டு மாவட்டத்தில் என்.எச்-32 (ஜிஎஸ்டி சாலை) புக்கத்துறை மற்றும் படாளம் சாலை சந்திப்புகளில் மேம்பால கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், தசரா மற்றும் ஆயுத ए कं (30.09,2025 to 01.10.2025) செல்வோர் போக்குவரத்து நெரிசலை சந்திக்க நேரிடும்.

1. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் போது தாமதங்களை தவிர்க்க ஈசிஆர், ஜிடபள்யூடி சாலைகள் வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.

2. செங்கல்பட்டு மற்றும் சென்னையின் தென் பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், படாளம் மற்றும் புக்கத்துறை மேம்பால பணி நடைபெறும் பகுதிகளை தவிர்க்க, செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் - மேலவளம்பேட்டை வழியாக மீண்டும் ஜிஎஸ்டி சாலையை அடைந்து செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த ரூட்ல போங்க

3. மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் - செங்கல்பட்டு காஞ்சிபுரம் பைபாஸ் வழியாக திருமுக்கூடல்நெல்வாய் கிராஸ் சாலை - உத்திரமேரூர் வந்தவாசி திண்டிவனம் வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையிலிருந்து மேற்கு செல்லும் மாவட்டங்களை நோக்கி வாகனங்கள் ஜிடபள்யூடி சாலை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் 30.9.2025 பகல் 2 முதல் 1.10.2025 காலை 3 மணி வரை இயங்க அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களுக்கு

மேலும், கனரக வாகனங்களுக்கு சில முக்கிய இடங்களில் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி போன்ற இடங்களில் இந்த மாற்றம் அமலுக்கு வரும்.

சென்னை மற்றும் ஆவடிக்குள் வரும் கனரக வாகனங்கள் பூந்தமல்லியில் இருந்து திருப்பி விடப்படும். இந்த வாகனங்கள் GWT சாலை வழியாக ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாகச் சென்று GST சாலையை அடைய வேண்டும். மதுரவாயலில் இருந்து தாம்பரம் GST சாலைக்கு வரும் கனரக வாகனங்களும் திருப்பி விடப்படும். இந்த வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் வழியாகச் சென்று அதே GST சாலையை அடைய வேண்டும்.

காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக ஒட்டேரிக்கு வரும் கனரக வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் திருப்பி விடப்படும். இந்த வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாகச் சென்று GST சாலையை அடைய வேண்டும். இந்த வழித்தட மாற்றங்கள் செப்டம்பர் 30 அன்று நாள் முழுவதும் அமலில் இருக்கும்.

விடுமுறை முடிந்து வருபவர்கள்

அதேபோல், விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கும் போக்குவரத்து திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 5 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 4 மணி வரை இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும். செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வரும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் சாலை வழியாக திருப்பி விடப்படும். இந்த வாகனங்கள் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் வழியாகச் சென்று பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னைக்குள் நுழைய வேண்டும்.

சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் வாகனங்கள் ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பி விடப்படும். பின்னர், இந்த வாகனங்கள் பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு வரலாம். இரும்புலியூர் பாலத்திற்கு அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, அங்கு சிக்கித் தவிக்கும் வாகனங்கள் வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

தாம்பரம் நகர காவல்துறை, GST சாலை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கிழக்கு கடற்கரை சாலை (ECR), பழைய மாமல்லபுரம் சாலை (OMR) மற்றும் பிற முக்கிய சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

பயணிகள் GST சாலையைத் தவிர்த்து, மாற்று வழிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற அருகிலுள்ள மாவட்டங்களுக்குச் செல்லும் போது OMR மற்றும் ECR சாலைகளைப் பயன்படுத்தலாம். இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும்.

சாலைப் போக்குவரத்தைக் குறைப்பதற்காக, சிறப்பு உள்ளூர் ரயில்கள் வழக்கமான இடைவெளியில் இயக்கப்படும். முடிந்தவரை ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. மேலும், செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 30 வரை KCBT மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் மொத்தம் 2,430 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+