ஆபாச வீடியோ.. ரூ.20 கோடி பேரம்.. தருமபுரம் ஆதீனத்தை "டார்ச்சர்" செய்த பாஜக தலைகள்.. ஷாக் தகவல்கள்
சென்னை: தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியரை மிரட்டி பணம் கேட்ட பாஜக நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேரை மயிலாடுதுறை மாவட்ட போலீஸார் கைது செய்துள்ளனர்.
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டியதாக பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் 6 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை யாத்திரைக்கு 20 கோடி கொடுக்க வேண்டும்.. அப்படி கொடுக்கவில்லை என்றால் உங்கள் வீடியோவை வெளியிடுவோம் என்று கூறி இந்த பாஜக நிர்வாகிகள் மிரட்டியதாக போலீசார் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட நபர்கள் குடியரசு, ஆடுதுறை வினோத் (BJP மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர், தஞ்சை வடக்கு மாவட்டம் ), விக்னேஷ் (BJP மாவட்ட செயலாளர் மயிலாடுதுறை மாவட்டம் ) மற்றும் ஸ்ரீனிவாஸ் (BJP முன்னாள் மாநில இளைஞர்அணி செயற்குழு உறுப்பினர், தஞ்சை வடக்கு மாவட்டம்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பாஜக மாவட்ட தலைவர் அகோரம், தருமபுரம் ஆதீன ஊழியர் செந்தில், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எப்ஐஆர் சொல்வது என்ன?: மடாதிபதிகள் மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரம் ஆதினம் சார்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், Whatsapp மூலம் தொடர்பு கொண்டு தன்னிடமும் தலைமை மடாதிபதி சம்மந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ தன்னிடம் உள்ளதாகவும் தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்களிலும் டிவி சேனல்களிலும் மேற்படி ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதின மடத்தையும் மடாதிபதியையும் அவமானபடுத்தி விடுவதாகவும் அந்த பாஜக நிர்வாகி மிரட்டி உள்ளார்.
பணம் கொடுக்காமல் போலீசுக்கு போனால் ரவுடிகளை கொண்டு மடத்தை சார்ந்தவர்களை கொலை செய்ய கூட தயங்கமாட்டோம் என்று ஆபாச வார்த்தைகளால் மிரட்டினர். பலமுறை மடத்தை சேர்ந்தவர்களை கழுத்தை நெருக்கி கொலை செய்ய முயற்சித்தனர். நாங்கள் உயிருக்கு பயந்து மடத்தில் உள்ளவர்களிடம் பேசி பணம் பெற்று தருவதாக தெரிவித்தோம். .
அவர்கள் கேட்டும் தொகையை கொடுத்து பிரச்சினை இல்லாமல் விசயத்தை முடிக்குமாறும் மிரட்டல் விடுத்தனர் என்று அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.
முதல் முறை இப்படி: தமிழ்நாட்டில் ஆதீனங்களுக்கு சமீப காலமாக சில விஷயங்களில் எதிர்ப்புகள் இருந்தாலும்.. இதுவரை ஆதீனம் ஒருவரை எந்த அரசியல் பிரமுகரும் மிரட்டியதாக, அதுவும் வீடியோ வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக வரலாறே இல்லை.
இந்த நிலையில்தான் பாஜக தற்போது இந்த வீடியோ விவகாரத்தில் சிக்கி உள்ளது. தருமபுரம் ஆதீனம் பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவும் நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியருக்கு பல்லக்கு தூக்கும் விழாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை பல இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இப்படி பல்லக்கில் செல்லும் நிகழ்வை பட்டின பிரவேசம் என்பார்கள். இந்த நிகழ்வில் திமுக - ஆதீனம் இடையே பெரிய மோதல் ஏற்பட்டது.
அதோடு இந்த விவகாரத்தில் பாஜக தருமபுரம் ஆதீனத்திற்கு ஆதரவாக இருந்தது. அப்படி இருக்க தற்போது அதே ஆதீனத்தை "வீடியோ" வைத்து மிரட்டியதாக பாஜக நிர்வாகிகள் மீது எப்ஐஆர் பதியப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் எப்ஐஆரில் ஏ1 ஆக போடப்பட்டு உள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், தலைமறைவாகி உள்ளார். இவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கோல் ஆதீனம்: சில மாதங்களுக்கு முன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் டெல்லியில் திறக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே பூஜையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நடந்தது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 1947-ம் ஆண்டு செங்கோல் பிரதமர் மோடி மூலம் நிறுவப்பட்டது.
மேலும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் 21 ஆதீனங்களின் மடாதிபதிகள் பங்கேற்றனர். 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வை புறக்கணித்தனர். தருமபுரம் ஆதீனமும் பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவும் நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications