அவ்வளவு வெறி.. நண்பனின் பிறப்புறுப்பை துண்டித்து கொடூர கொலை! ராயன் படத்தால் வெறியான இளைஞர்கள்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த ஓட்டேரி பகுதியில் தாயை அவதூறாக பேசியதாக நண்பனின் பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். தனுஷ் நடித்த ராயன் படத்தை பார்த்த போது ஏற்பட்ட தகராறில், அப்படத்தைப் போலவே கொலையை அரங்கேற்றியுள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர் கொலையாளிகள்.

சென்னை ஓட்டேரி பி.பிளாக் பி.எஸ்.மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சிராஜ் . இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

chennai police crime

இவர் நேற்று மதியம் ஓட்டேரி செங்கை சிவம் மேம்பாலம் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து நண்பர்களான ஓட்டேரி தசமா கான், ஓட்டேரி தர்கா தெரு 4வது லேனை சேர்ந்த கலீல் ஆகிய 5வது குறுக்கு தெருவை சேர்ந்த இம்ரான் ஆகியோருடன் மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இம்ரான், கலீல் இருவரும் சிராஜை தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்தனர். ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்த போதும், ஆத்திரம் அடங்காத கொலை கும்பல் அவரது பிறப்புறுப்பை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார் சிராஜ். இதையடுத்து, இருவரும் அங்கிருந்து ஆட்டோவில் சென்று ஓட்டேரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சரணடைந்தவர்களிடம் ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தினார். அதில், ஓட்டேரி மகாலட்சுமி திரையரங்கில் 10 நாட்களுக்கு முன் ராயன் படம் பார்த்து கொண்டிருந்த சிராஜ், முன் வரிசையில் அமர்ந்து படம் பார்த்தார்.

பின்னால் உள்ள வரிசையில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த இம்ரான் முகமது கலீல், சிராஜ் மீது விழுந்தார். இதனால், அவர்களையும், அவரது தாய் குறித்தும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் அப்போதே இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். ஆனாலும் இருவருக்குமிடையே மோதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று இம்ரானும் கலீலும், சிராஜை அழைத்து சமாதானம் செய்து வைக்கிறோம் எனக் கூறி அழைத்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது, ​​குடிபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சிராஜ் தனது நண்பர் என்றும் பாராமல் கலீலின் தாயாரை பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலீல், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிராஜின் கழுத்தை அறுத்தார். அதற்கு இம்ரானும் உதவி செய்துள்ளார். பின்னர், அவரது பிறப்புறுப்பையும் அறுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து கொலையாளிகளான கலீல், இம்ரான் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரும் போலீசில் சரண் அடைந்த நிலையில், போலீசாரை குழப்பும் வகையில் பேசியுள்ளார். முதலில் நாங்கள் 6 பேர் சேர்ந்து குடித்தோம் மற்ற 3 பேர் தான் சிராஜை கொலை செய்ததாக கூறியுள்ளனர். ஆனால், போலீசார் அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தபோது, ​​குறிப்பிட்ட இடத்திற்கு 3 பேர் மட்டுமே சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்த போது தான் முதலில் தாங்கள் சொன்னது பொய் எனவும், தாயை பற்றி அவதூறாக பேசியதால் சிராஜை கொலை செய்ததாகவும், ராயன் படத்தில் வருவது போலவே கொலை செய்ய திட்டமிட்டு அழைத்து வந்து, கழுத்தையும், பிறப்புறுப்பையும் அறுத்துக் கொன்றதாகக் கூறினர். இதனையடுத்தே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+