"டீச்சர்.. என்னை லவ் பண்ண போறீங்களா இல்லையா".. நடுரோட்டில் பெண்ணை சரமாரி தாக்கிய இளைஞர்
பள்ளி ஆசிரியைக்கு லவ் டார்ச்சர் தந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்
Recommended Video
சென்னை: "டீச்சர்.. என்னை லவ் பண்ண போறீங்களா இல்லையா.." என்று தன் காதலை ஏற்க மறுத்த ஆசிரியை ஒருவரை, நடுரோட்டிலேயே இழுத்து போட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார் இளைஞர்.
பல்லாவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக இருக்கிறார். இவருக்கு வயசு 24 ஆகிறது. இவரை அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்ற 29 வயது நபர் காதலித்துள்ளார்.

ஒன் சைட் லவ்தான்.. ஒருநாள் டீச்சரிடம் தன் காதலை சொல்லினார் வெங்கட்ராமன். ஆனால் டீச்சர் அதை ஏற்கவில்லை. இதனால் தினமும் ஸ்கூலுக்கு போகும்போதும், வரும்போதும், லவ்வை ஏற்று கொள்ளும்படி டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
அப்படித்தான் சம்பவத்தன்றும் இப்போதும் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு போவதற்காக பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் டீச்சர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கட்ராமன், ''என் லவ்வுக்கு பதில் என்ன.. ஏத்துக்க போறியா இல்லையா.." என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
அப்போதும் டீச்சர் மறுக்கவும், வெங்கட்ராமனுக்கு ஆத்திரம் அதிகமாகி நடுரோட்டிலேயே அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். வலி பொறுக்க முடியாத டீச்சர் அங்கிருந்து தப்பி அலறி கொண்டே ஓடினார்.
இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த போலீசார் வெங்கட்ராமனை கைது செய்தனர். தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழலில் தூக்கி வைத்தனர்.
கைது செய்தபிறகுதான், ஏற்கனவே பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர்தான் இந்த வெங்கட்ராமன் என்பது போலீசுக்கு தெரியவந்தது. இப்போது டீச்சர் மேட்டரில் வசமாக போலீசாரிடம் சிக்கி உள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications