சக பெண் அதிகாரி பற்றி வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த எஸ்.பி.. மெமோ அனுப்பிய டிஜிபி! பரபரப்பு!
சென்னை: சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமாருக்கு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மெமோ அனுப்பியுள்ளார். சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா குறித்து வாட்ஸ்அப்பில் வைத்த ஸ்டேட்டஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளார் டிஜிபி.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார். அதில் "பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை" என்ற தலைப்புடன் வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. அதில் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி பெறவேண்டும் என்று கடந்த 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார். ஓய்வுபெற்ற டிஜிபியிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியை பெற முயற்சி செய்தார்" என அதிர்ச்சி தகவல்களுடன் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.

இந்த ஸ்டேட்டஸ் வைக்கப்பட்ட மூன்று நிமிடங்களிலேயே அகற்றப்பட்டது. எனினும், சேலம் எஸ்.பி தனது வாட்ஸ் அப்பில், சக அதிகாரி குறித்த தகவல்களுடன் ஸ்டேட்டஸ் வைத்தது காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மெமோ அனுப்பியுள்ளார். சேலம் மாநகர துணை ஆணையர் லாவண்யாவுக்கு எதிராக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்தது குறித்து விளக்கம் அளிக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications