Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹோஸ் பைப்பில் தண்ணீர் லீக்காவது போல.. சட்டென நடந்த வாயு கசிவு! சம்பவ இடத்தில் விளக்கிய போலீஸ்.. ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் ஒருவர் பொதுமக்களிடம் விளக்கம் அளித்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

சென்னையை அடுத்த எண்ணூர் கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து, கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. எண்ணூர் சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதி அடைந்தனர்.

Police explains about the Ennore Gas Leak issue in Coromandal Company

அருகே இருந்த குடியிருப்புகளுக்குள் இந்த அமோனியம் வாயு பரவியது. கடலில் 2 கிமீ தூரத்தில் இருந்து கசிந்து வெளியேறிய வாயு.. ஊருக்குள் வந்தது. இதனால் ஊருக்குள் இருந்த மக்கள் பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள மக்கள் பலரும் இதனால் வேறு வழி இன்றி வீட்டை விட்டு ஓடினார்கள். பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பதற்றம் அடையாமல் வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

மூச்சு திணறல்: எண்ணூர் ரசாயன தொழிற்சாலையில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் மக்கள் பலரும் கடுமையான மூச்சு திணறல் காரணமாக பாதிக்கப்பட்டனர். அங்கே உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விளக்கம்: இதே சமயம் அருகாமையில் உள்ள பகுதிகளில் பதற்றமடைந்த மக்களை அழைத்து அமைதிப்படுத்திய காவல்துறையினர்.. அவர்களிடம் விளக்கம் அளித்தனர். அதில் ஒரு போலீஸ் அதிகாரி ஜீப் மீது ஏறி.. நான் இப்போதுதான் அங்கே பார்வையிட்டுவிட்டு வருகிறேன். அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியிடம் பேசிவிட்டு வருகிறேன். பிரச்சனை இல்லை.

அந்த தொழிற்சாலைக்கு ஒரு பைப் செல்கிறது. அது கடலில் இருந்து வருகிறது. கடலுக்கு உள்ளே 2 கிலோ மீட்டர் வரை பைப் உள்ளது. அந்த பைப் இறுதியில் வேறு ஒரு கப்பலுடன் இணைக்கப்பட்டு அது வழியாக அமோனியா அனுப்பப்படும். ஆனால் அந்த கப்பல் இப்போது இல்லை. அது அமோனியாவை அனுப்பிவிட்டு சென்றுவிட்டது.

தண்ணீர்: பொதுவாக பைப் ஹோஸ்களில் தண்ணீர் வெளியேற்றினால்.. அந்த ஹோஸ் உள்ளே தண்ணீர் நிறுத்திய பின்பும் கொஞ்சம் தண்ணீர் மீதம் இருக்கும் இல்லையா? அப்படித்தான் இந்த பைப் உள்ளேயும் அமோனியா அனுப்பிய பின்பும் கொஞ்சம் அமோனியா மீதம் இருந்துள்ளது. அதுதான் அங்கே கசிவு ஏற்பட காரணம். இந்த அமோனியா இருந்த குழாயில் சின்ன கசிவு ஏற்பட்டது.

இப்போது அது சரி செய்யப்பட்டுவிட்டது. அதனால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று போலீசார் விளக்கம் அளித்தனர். ஆனால் இதை கேட்காமல் அமோனியா வாயு வெளியேறிய கோரமண்டல் தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. நுழைவுவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினருடம் மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

வாயு கசிவை உறுதி செய்தது மாசு கட்டுப்பாடு வாரியம்: எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்தது. ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா, 2090 microgram/m3 ஆகவும், கடலில் 5 mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா, 49 mg/L இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+