"கொன்னுடுவேன் உன்னை.." சென்னையில் 22 வயது பெண்ணிடம் அத்துமீறிய ரேபிடோ டிரைவர்.. நள்ளிரவில் பயங்கரம்
சென்னை: தலைநகர் சென்னையில் பைக் டாக்சியில் பயணித்த பெண் ஒருவரிடம் டிரைவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இப்போது பைக் டாக்சி பிரபலமடைய ஆரம்பித்துள்ளது. கார், ஆட்டோ என்றால் விலை அதிகம் டிராபிக்கிலும் மாட்டிவிடுவோம். ஆனால் பைக் என்றால் டிராபிக்கிலும் சென்றுவிடலாம். மேலும், விலையும் குறைவாகவே இருக்கும்.

இதனால் லக்கேஜ் இல்லாமல் தனியாகப் பயணிக்கும் பலரும் பைக் டாக்ஸியை தான் விரும்பி பயன்படுத்துகிறார்கள். முன்பு ஆண்கள் மட்டுமே இதைப் பயன்படுத்தினாலும் இப்போது இதைப் பெண்கள் பயன்படுத்துவதும் கணிசமாக அதிகரித்துள்ளது.
பைக் டாக்சி: பெரும்பாலான நேரங்களில் பைக் டாக்சி பயணங்களில் பெண்கள் எந்தவொரு பிரச்சினைகளையும் எதிர்கொள்வதில்லை. இருப்பினும் சில நேரங்களில் பைக் டாக்சி டிரைவர்கள் பயணிக்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் ஷாக் சம்பவங்களும் நடக்கிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது சென்னையில் நடந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் வசிக்கும் 22 வயது பெண் ஒருவர் கடந்த 19ஆம் தேதி தனது மொபைல் மூலம் ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்துள்ளார். கிண்டியில் இருந்த அந்த பெண் கொட்டிவாக்கம் வரை செல்ல பைக் டாக்ஸியை புக் செய்துள்ளார். கொட்டிவாக்கம் செல்லும் வரை எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணை இறக்கிவிட்ட பிறகு ஓட்டுநரின் செயல்பாடுகள் மாறியுள்ளது.
அத்துமீறிய டிரைவர்: பைக்கில் இருந்து இறக்கிவிட்ட பிறகு அந்த நபர் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் உடனடியாக அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இருப்பினும், அவரை விடாமல் பின்தொடர்ந்த அந்த ஓட்டுநர், பெண்ணுக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டுக் கிளம்பி இருக்கிறார்.
துணிச்சலாக அந்த பெண் இந்தச் சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். போலீஸ் விசாரணையில் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது நடனசபாபதி என்பதும் அவர் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
தட்டி தூக்கிய போலீஸ்: இதையடுத்து உடனடியாக போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர். மேலும், மொபைல் மற்றும் அவரது டூவீலர் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 6 மாதமாக நடனசபாபதி ரேபிடோ பைக் டாக்சி ஓட்டி வந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications