சென்னையில் அதிகாலையில் துப்பாகிக்சூடு.. வியாசர்பாடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்!
சென்னை: ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு போலீஸ் துப்பாகிகளை கையில் எடுத்திருக்கிறது. இந்நிலையில், இன்று அதிகாலை சென்னையில் பிரபல ரவுடியை போலீஸ் சுட்டு பிடித்திருக்கிறது.
போதை பொருட்கள் கடத்தல், வன்முறை, கூலிப்படையாக செயல்படுவது, கொலை, கொள்ளை என தலைநகர் சென்னையில் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கின்றன. இதனை கட்டுக்குள் கொண்டுவரும் வேலையை காவல்துறை செய்து வருகிறது. சில நேரங்களில் போலீசார் வேறு வழியின்றி துப்பாக்கியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அப்படியான சம்பவம் ஒன்றுதான் இன்று காலை நடந்திருக்கிறது.

அதாவது, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி அறிவழகனை போலீசார் பல்வேறு வழக்குகளில் தேடி வந்திருக்கின்றனர். இந்நிலையில் அவர் பெரம்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரை பிடிக்க இன்று அதிகாலை தனிப்படை போலீசார் விரைந்தனர். ஆனால் போலீசாரை தாக்கிவிட்டு அறிவழகன் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயன்றிருக்கிறார். இதனையடுத்து வேறு வழியின்றி போலிசார் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர்.
அறிவழகனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த அவரை மீட்ட போலீசார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ள சம்பவம் பெரம்பூர் பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் துப்பாக்கிகளை பயன்படுத்துவது குறித்து தொடர் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. விமர்சனங்கள் குறித்து காவல்துறை பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ்












Click it and Unblock the Notifications