போலீஸ் தாக்கியதில் கார் டிரைவர் பலியான சம்பவம்.. ஜாமீனில் விடுதலையான தலைமை காவலர் சஸ்பெண்ட்!
சென்னை: சென்னை மதுரவாயல் அருகே போலீசார் தாக்கியதால் கார் ஓட்டுநர் பலியான சம்பவம் தொடர்பாக தலைமை காவலரை கைது செய்த நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தலைமை காவலர் ரிஸ்வான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் ஒரு பெண்ணுடன் நின்றிருந்த கால் டாக்சி டிரைவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். போலீசார் தாக்கியதில் அவர் இறந்ததாக புகார் அளிக்கப்பட்டது. சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (40). கால்டாக்சி டிரைவரான இவர் கடந்த மார்ச் 21ஆம் தேதி இரவு நேரத்தில் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு, ஒரு பெண்ணுடன் பேசி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அங்கு ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் தலைமை காவலர் ரிஸ்வான் அங்கு வந்துள்ளார். ராஜ்குமாரிடம் விசாரித்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ராஜ்குமாரை தலைமை காவலர் ரிஸ்வான் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் ராஜ்குமார் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே ராஜ்குமாருடன் நின்றிருந்த பெண், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரவாயல் போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜ்குமாரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில், ராஜ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, மாரடைப்பு காரணமாக இறந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், போலீசார் தாக்கியதில் ராஜ்குமார் மர்மமான முறையில் இறந்துபோனதாக உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ரோந்து பணியில் இருந்த 3 காவலர்களையும் காவல்துறை உயர் அதிகாரிகள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். ரிஸ்வான் தாக்கியதாலேயே ராஜ்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து ரிஸ்வான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
கார் ஓட்டுநர் பலியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் ரிஸ்வான் நேற்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். மதுரவாயல் காவல் நிலைய தலைமை காவலர் ரிஸ்வானுக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இந்நிலையில் தலைமை காவலர் ரிஸ்வானை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications