Gem Veeramani: ஜெம் வீரமணிக்கு எதிராக 10 சிறுமிகள் வாக்குமூலம்? ஏஐ உதவியுடன் கண்டறிந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணிக்கு எதிராக 10 சிறுமிகளிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குளோசர் ரிப்போர்ட்டில் வீடியோவில் இருந்த சிறுமியை ஏஐ உதவியுடன் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

தொழிலதிபரான ஜெம் வீரமணி சிறுமிகளை படிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

Gem Veeramani

அதன்பேரில் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கடந்த 28ஆம் தேதி கைது செய்யப்பட்டு , அவர்கள் 29 ஆம் தேதி முதல் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை விஜய் கூர்ந்து கவனித்து வருவதாகவும் , வீரமணியிடம் நடத்திய விசாரணையில் அவரது வாக்குமூலத்தையும் அறிந்திருக்கிறார்.

இந்த வழக்கில் யார் யார் தவறு செய்தார்களோ அவர்களை கைது செய்ய போலீஸாருக்கு விஜய் ஃப்ரீ ஹேண்ட் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையை வைத்து போலீஸார் அந்த சிறுமிகளை அடையாளம் கண்டுள்ளனராம். ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவர்களை அடையாளம் கண்டு கொண்டதாக சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் மேஜராகவிட்டதால் அவர்களை அடையாளம் காண்பது சிரமமாக இருந்த நிலையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அவர்களிடம் இருந்து வாக்குமூலத்தையும் போலீஸார் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரமணி இது போல் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை மிரட்டிய சம்பவத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவு நிர்வாகி ரஞ்சன் குமார், 2024 ஆம் ஆண்டே இந்த சம்பவத்தை அறிந்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்த புகாரே 2025 ஆம் ஆண்டுதான் போலீஸுக்கு யாரோ தன்னார்வலர் மூலம் கிடைத்ததாக சொல்வது தவறு என்றும் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கில் ஜாமீன் கேட்டு சாந்தி, மகேந்திர சிம்ஹன் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாரும் போக்சோ நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். அவர்களிடம், எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை காலம் இந்த குற்றம் நடந்தது, யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரிக்கப்படவுள்ளதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+