நல்ல நாள் அதுவுமா.. பட்டாசால் பாய்ந்த கேஸ்! தீபாவளி அன்று தமிழ்நாட்டில் விதிமீறியவர்கள் மீது ஆக்சன்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு நிர்ணயம் செய்த நேரத்தை மீறி பட்டாசுகளை வெடித்தவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.
நேற்று தீபாவளி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து மக்கள் தீபாவளியை கொண்டாடினர். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை தமிழ்நாடு அரசு விதித்து இருக்கிறது. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த நேர விதிமுறைகளை கடைபிடிக்காமல் பலர் அதிக நேரம் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் சென்னையில் காற்று மாசு தரக் குறியீடு 200 ஐ தாண்டி பதிவானது. அதேபோல், கடலூர், வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் காற்று மாசு தரக் குறியீடு உயர்ந்தது. இந்த நிலையில் அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் பட்டாசு வெடிப்பதில் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 150 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் 199 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். திருச்சி மலைக்கோட்டை, தில்லைநகர், பொன்மலை காவல் நிலையங்களில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரோட்டிலும் 9 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
முன்னதாக, "எதிர்பாராத விதமாக தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, காவல்துறை அவசர உதவி எண்.100, அவசர உதவி ஆம்புலன்ஸ்:108, தேசிய உதவி எண்.112, ஆகியவற்றை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications