கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு
ஆவடி: சென்னை அடுத்த ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் கழிவறையில் வழுக்கி விழுந்து பலியான ஆய்வாளரின் உடலை போலீசார் மீட்டனர்.
ஆவடி, நந்தவனமேட்டூரைச் சேர்ந்தவர் முனுசாமி (57) உளுந்தூர்பேட்டையில் உள்ள 10 வது பட்டாலியனில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பார்வதி செல்லம், 53. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

முனுசாமி, கடந்த 9 ம் தேதி, பணி ஓய்வு பெறுவது தொடர்பாக விண்ணப்பிக்க, ஆவடி சிறப்பு காவல்படை 2 வது பட்டாலியனில் உள்ள ஏ.டி.ஜி.பி., அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவரது மனைவி, மகனுடன் வெளியூர் செல்வதாக கூறிச் சென்றதாக தெரிகிறது.
இதனால், முனுசாமி, 2வது பட்டாலியனில் உள்ள காவல் ஓய்வறையில் தங்கி, காலையில் பணிக்கு செல்வதாக கூறி அங்கு தங்கியுள்ளார். இந்நிலையில், அவரிடமிருந்து கடந்த சில நாட்களாக மொபைல்போன் அழைப்புகள் வராததால், குடும்பத்தினர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த போலீசார், நேற்று இரவு, 2 வது பட்டாலினில் பயன்படுத்தப்படாமல் இருந்த கழிவறையில் முனுசாமியின் உடலை, அழுகிய நிலையில் மீட்டனர். இதில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முனுசாமி, கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications